குமரி கோயில்களில் நயன்தாரா சிறப்பு வழிபாடு!

குமரி கோயில்களில் நயன்தாரா சிறப்பு வழிபாடு!

நடிகை நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் கன்னியாகுமரி மற்றும் நாகர்கோவில் பகுதியில் உள்ள கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்தார்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையான நயன்தாரா சினிமாவில் அதிகளவில் கவனம் செலுத்தி வந்தாலும் ஆன்மிகத்திலும் நாட்டம் காட்டி வருகிறார். அதேபோல தனது குடும்பத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்.  தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் உள்ள முக்கிய கோவில்களுக்கு சென்று  தரிசித்து, பிரார்த்தனை செய்து வருகிறார். 

அந்த வகையில் கன்னியாகுமரியில் உள்ள பிரபல கோவில்களில் அவர் நேற்று சாமி தரிசனம் செய்தார். நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கன்னியாகுமரி அருகே உள்ள புகழ்பெற்ற  சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலுக்கு சென்றனர். அங்கு தட்சிணாமூர்த்தி, கொன்றையடி, தாணுமாலயன், திருவேங்கட விண்ணவரம் பெருமாள், ராமர், விஸ்வரூப ஆஞ்சநேயர் உள்ளிட்ட சாமிகளை வழிபாடு செய்தனர். 

இதனைத் தொடர்ந்து நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலுக்கு சென்ற நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதி அங்கும் சாமி தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டசாமி கோவிலுக்கும்  சென்று தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கும் சென்று தரிசனம் செய்தனர்.

அனைத்து கோயில்களிலும் அவர்களுக்கு கோயில் நிர்வாகிகளால் வரவேற்பு அளிக்கப்பட்டு சிறப்பான முறையில் தரிசனம் செய்து வைக்கப்பட்டது. நயன்தாரா வந்திருப்பது குறித்து தகவல் அறிந்த ஏராளமான ரசிகர்கள் கோவில்களில் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in