சதுரகிரி தரிசனம்; பக்தர்களுக்கு 4 நாட்கள் மட்டும் அனுமதி

சதுரகிரி தரிசனம்; பக்தர்களுக்கு 4 நாட்கள் மட்டும் அனுமதி

சதுரகிரி மலையில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு மட்டும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி மலை, சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு, மாதத்தில் 8 நாள் தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப் படுகின்றனர். வரும் 4-ம் தேதி, மார்கழி மாத வளர்பிறை பிரதோஷத்தையொட்டி, சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களை அனுமதிக்க மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

அந்த அறிவிப்பில், ‘சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயிலுக்கு வரும் 4-ம் தேதி பிரதோஷம், 6 -ம் தேதி மார்கழி மாத பவுர்ணமி பூஜை. இதனால் 4 முதல் 7-ம் தேதி வரை 4 நாள் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கரோனா தொற்று பரவும் வாய்ப்பு இருப்பதால் 10 வயதுக்குட்பட்டவர்களும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலைக்கோயில் செல்வதை தவிர்க்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

அனுமதிக்கப்பட்ட நாட்களில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேறிச் செல்ல அனுமதி வழங்கப்படும். மலைக் கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி, மாவட்ட நிர்வாகத்தின் நிபந்தனைகளை பக்தர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in