ஒரே தேங்காய்க்குள் 3 அறைகள்... திருவண்ணாமலை கோயிலில் பக்தி பரவசம்!

தேங்காயில் உள்ள மூன்று அறைகள்.
தேங்காயில் உள்ள மூன்று அறைகள்.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் பக்தர் ஒருவர் உடைத்த தேங்காயில், மூன்று அறைகள் இருந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், திருவண்ணாமலையில் அருணாச்சலேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில், இது அக்னித் தலமாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். திருவாசகத் திருத்தலங்களில் ஒன்று என்ற பெருமையினையும் கொண்ட தலமாகும். இந்த கோயிலுக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். இங்கு சாமி தரிசனம் செய்ய வருபவர்கள் தேங்காய் உடைப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

தேங்காய்க்குள் இருந்த மூன்று அறைகள்
தேங்காய்க்குள் இருந்த மூன்று அறைகள்

அந்த வகையில் இன்று கோயிலுக்கு வந்த பக்தர் ஒருவர் தேங்காய் உடைக்குமாறு கோயில் பணியாளர்களிடம் கொடுத்துள்ளார். அப்போது அதை உடைத்து பார்த்த போது, ஒரே தேங்காய்க்குள் மூன்று அறைகள் இருந்தது தெரியவந்தது. இதனால் பக்தர்கள் பெரும் பரவசத்திலும் ஆச்சரியத்திலும் ஆழ்ந்தனர். பக்தர்கள் பலரும் இது கடவுளின் சித்தம் எனக் கூறி அருணாச்சலரேஸ்வரரை வணங்கி சென்றனர்.

தற்போது இந்த மூன்று அறைகள் கொண்ட தேங்காய் புகைப்படங்கள் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனிடையே மரபணு காரணங்களால், இது போன்று தேங்காய்களில் கூடுதல் அறைகள் உருவாவது இயல்பு என அறிவியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... துப்பாக்கியால் சுட்டு ஆசிரியரை பதற வைத்த மாணவர்கள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

டெம்போவில் உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்யும் மாணவர்கள்

விசித்ரா கூட ஒரே பெட்ல படுக்கணும்... பிரதீப் பேச்சால் பிக் பாஸ் வீட்டில் சர்ச்சை!

கவின் திருமணம் குறித்து முதல்முறையாக மனம் திறந்த லாஸ்லியா!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in