காசி தமிழ்ச் சங்கமம் - இரண்டாவது ரயிலும் இன்று புறப்பட்டது!

காசி தமிழ்ச் சங்கமம் - இரண்டாவது ரயிலும் இன்று புறப்பட்டது!

காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சிக்காக தமிழகத்திலிருந்து இரண்டாவது ரயில் இன்று அதிகாலை கோவையிலிருந்து புறப்பட்டது. 

மத்திய அரசின் சார்பில் காசிக்கும் தமிழகத்திற்குமான ஆன்மீகம் மற்றும் கலாச்சார தொடர்பை வலுப்படுத்தும் வகையில் காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி காசியில் நடைபெற்று வருகிறது. இதனை துவக்கி வைத்து உரையாற்றிய பிரதமர் மோடி தமிழகத்தின் பெருமைகளை எடுத்துக் கூறியிருந்தார்.  அதில் கலந்து கொள்வதற்காக முதல் ரயில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு தமிழகத்திலிருந்து புறப்பட்டு சென்றது. அதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் சென்றனர்.

முதல் கட்ட பயணத்தில் மாணவர்கள் இடம்பெற்ற நிலையில், இன்றைய பயணத்தில் கைவினைப் பொருட்கள் தயாரிப்பாளர்கள், விசைத்தறி நெசவாளர்கள் மற்றும் இசைக்  கலைஞர்கள் உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in