ஊரே வறண்டாலும் கோயில் உண்டியல் குவிகிறது... ஒரு ஆண்டில் 11 கோடி ரூபாய் பக்தர்கள் காணிக்கை!

பெலகாவியில் உள்ள  யல்லம்மா தேவி கோயில்
பெலகாவியில் உள்ள யல்லம்மா தேவி கோயில்

கர்நாடகாவில் கடுமையான வறட்சி பாதித்த மாவட்டமான பெலகாவியில் உள்ள ஒரு கோயிலில் ஒரே ஆண்டில் 11 கோடி ரூபாய் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

பெலகாவியில் உள்ள  யல்லம்மா தேவி கோயில்
பெலகாவியில் உள்ள யல்லம்மா தேவி கோயில்

கர்நாடகாவில் போதிய மழையில்லாததால் பல பகுதிகள் வறட்சியின் பிடியில் சிக்கியுள்ளன. குறிப்பாக, பெங்களூருவில் வரலாறு காணாத குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டள்ள. மாநிலத்தில் உள்ள பெல்காம், பெலகாவி, குந்தா உள்பட 200-க்கும் மேற்பட்ட தாலுகாக்கள் வறட்சி பாதித்த பகுதிகளாக அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் வறட்சி பாதித்த பகுதியில் உள்ள ஒரு கோயிலில்,கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 11 கோடி ரூபாய் பக்தர்கள் காணிக்கை செலுத்தியுள்ளனர்.

கோயிலில் உண்டியல் எண்ணும் பணி
கோயிலில் உண்டியல் எண்ணும் பணி

பெலகாவி மாவட்டத்தில் உள்ள சவடத்தி ரேணுகா யல்லம்மா தேவி கோயில், வட கர்நாடகாவில் உள்ள புகழ்பெற்ற புனித யாத்திரை தலமாகும். மேலும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து செல்கின்றனர். வறட்சி பாதித்த நிலையிலும், 2023-2024-ம் ஆண்டில் கோயில் உண்டியலில் 11.23 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. பக்தர்கள் ரொக்கம், தங்கம், வெள்ளி ஆபரணங்களை பானையில் வைத்து செலுத்தியுள்ளனர். கடந்த ஆண்டை விட இம்முறை 2.4 கோடி ரூபாய் கூடுதலாக காணிக்கை செலுத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

பெலகாவியில் உள்ள  யல்லம்மா தேவி கோயில்
பெலகாவியில் உள்ள யல்லம்மா தேவி கோயில்

கோயில் உண்டியலில் 2023-2024-ம் ஆண்டில் ரொக்கம், 84.14 லட்சம், ரூ.16.65 லட்சம் மதிப்புள்ள தங்கம், ரூ. 11.23 கோடி மதிப்புள்ள வெள்ளி ஆபரணங்கள் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இரண்டு கனடா நாட்டு கரன்சி நோட்டுகளும் இருந்துள்ளன. இதில் ஒரே பக்தர், 31,35,360 ரூபாய் காணிக்கையாக செலுத்தியதும் தெரிய வந்துள்ளது. கோயில் மற்றும் உண்டியல், பணம் எண்ணும் இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இதையும் வாசிக்கலாமே...    

வரலாற்றில் உச்சம்... ரூ.51,000யைக் கடந்தது சவரன் விலை... ஒரே நாளில் ரூ.1,120 உயர்வு!

தேவாலய ஆராதனைக்குச் சென்றபோது ஆற்றுக்குள் கவிழ்ந்த பேருந்து... 45 பேர் பலியான பரிதாபம்!

அதிர்ச்சி... சென்னை தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

பள்ளி இறுதித்தேர்வு தேதியில் திடீர் மாற்றம்... ரமலான் பண்டிகையை முன்னிட்டு நடவடிக்கை!

அடுத்த தோனி இவர் தான்... தோனியே புகழ்ந்த அந்த நபர் இவரா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in