1,031 கிலோ தங்கம்... திருப்பதியில் ஓராண்டில் உண்டியல் காணிக்கை விபரம்!

திருப்பதி ஏழுமலையான் கோயில்
திருப்பதி ஏழுமலையான் கோயில்

கடந்த ஓராண்டில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 1,031 கிலோ தங்கம் பக்தர்களால் காணிக்கையாக வழங்கப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருப்பதி உண்டியல்
திருப்பதி உண்டியல்

உலகிலேயே பணக்கார கடவுளாக கருதப்படும் திருப்பதி ஏழுமலையானை வழிபடுவதையும், திருப்பதியில் காணிக்கை செலுத்துவதையும் பக்தர்கள் மிக முக்கியமானதாக கருதுகின்றனர். இந்த கோயிலுக்கு நாள்தோறும் 3 முதல் 4 கோடி ரூபாய் வரை உண்டியல் வருமானம் கிடைக்கிறது. மேலும், வைர, தங்க, வெள்ளி நகைகளும் காணிக்கையாக கிடைக்கின்றன. பக்தர்கள் சிலர் தங்களின் சொத்துகளையும் திருப்பதி ஏழுமலையானுக்கு எழுதி வைக்கின்றனர்.

இந்நிலையில், திருப்பதியில் கடந்த 2023-ம் ஆண்டில் மட்டுமே பக்தர்கள் 1,031 கிலோ தங்கத்தை உண்டியலில் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதன் மதிப்பு 773 கோடி ரூபாய். இதையும் சேர்த்து நாட்டின் பல்வேறு பொதுத்துறை வங்கிகளில் ஏழுமலையானுக்குச் சொந்தமான 8,496 கோடி ரூபாய் மதிப்பிலான 11,329 கிலோ தங்கம் முதலீடாக வைக்கப்பட்டுள்ளது.

தங்கம் விலை பல மடங்கு உயர்ந்தாலும் ஏழுமலையான் பக்தர்கள் அதைப் பற்றி கவலை இல்லாமல் தங்களின் தங்க ஆபரணத்தை ஏழுமலையானுக்கு காணிக்கையாக வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் மட்டும் 225 கிலோ தங்கம் உண்டியலில் காணிக்கையாக செலுத்தப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2022-ம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட வெள்ளை அறிக்கையின்படி , ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் சொத்து மதிப்பு 2.5 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. தற்போதைய நிகர மதிப்பு கிட்டத்தட்ட 3.5 லட்சம் கோடிக்கும் மேலாக  அதிகரித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. 

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in