மழைக்காக 100 ஆடுகள் பலியிட்டு படையல்... பொங்கல் பானைகளுடன் பெண்கள் ஊர்வலம்!

பொங்கல் பானைகளுடன் ஊர்வலமாக வரும் பெண்கள்
பொங்கல் பானைகளுடன் ஊர்வலமாக வரும் பெண்கள்

மதுரை அருகே மேலூரில் நடைபெற்ற  கோயில் திருவிழாவில்  மழை வேண்டி  100 ஆடுகள் பலியிட்டு கறி விருந்து படைத்து வழிபாடு நடத்தினர்.

மதுரை மாவட்டம், மேலூரில்  சின்ன அடக்கியம்மன், பெரியடக்கிஅம்மன், ஆண்டிஅரசு ஆகிய 3 கோயில்கள் ஒரே வளாகத்தில் உள்ளன.  இந்த கோயில்கள் சூரக்குண்டு,   அய்யர்பட்டி, சின்னசூரக்குண்டு, நாகலிங்கபுரம், முனியாண்டிபட்டி ஆகிய கிராம மக்களின்  காவல் தெய்வங்களாக வழிபட்டு வருகின்றனர்.  மழை பெய்து விவசாயம்  சிறப்பாக நடைபெற வேண்டி புரட்டாசி மாதத்தில் இங்கு  பொங்கல் விழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்த ஆண்டுக்கான பொங்கல் விழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி சூரக்குண்டு கிராமத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட பெண்கள்  ஒன்று கூடி சாமியாட்டத்துடன், பொங்கல் பானைகளை சுமந்து கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின்னர்  3 கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டன.

அதன் பின்னர்  100-க்கும் மேற்பட்ட ஆடுகள் பலியிடப்பட்டு பொங்கல் வைத்து  கறி சமைத்து படையல் இடப்பட்டது.  அதையொட்டி பொது விருந்து நடைபெற்றது. இதில் மேலூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள   கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானவர்கள்  கலந்துகொண்டனர். பக்தர்கள் அனைவருக்கும் கறி விருந்து பரிமாறப்பட்டது. 

இதையும் வாசிக்கலாமே...

கேபி சுந்தராம்பாள் பிறந்தநாள் பகிர்வு! கதையைத் தேர்ந்தெடுத்த ரியல் ஹீரோயின்!

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 4 ஆயிரமாக உயர்வு!

மகனுக்கா... மருமகளுக்கா?  சிவகங்கை தொகுதிக்கு மோதும் திமுக அமைச்சர்கள்!

காவிரி விவகாரத்தால் இன்று போராட்டம்; முடங்கியது டெல்டா மாவட்டங்கள்!

“லியோ பட ஷூட்டிங்... நடன கலைஞர்கள் சொல்றது பொய்” பெஃப்சி ஆர்.கே. செல்வமணி விளக்கம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in