புரட்டாசி சனிக்கிழமை... அதிகாலையிலேயே குவிந்த பக்தர்கள்... பிரசாதமாக வழங்க 10,000 லட்டுகள் தயார்!

தயாராகும் 10 ஆயிரம் லட்டுகள்
தயாராகும் 10 ஆயிரம் லட்டுகள்

ஈரோட்டில் உள்ள கஸ்தூரி அரங்கநாதர் கோயிவிலில் பக்தர்களுக்கு வழங்க 10 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள முக்கிய பெருமாள் கோவில்களில் ஒன்று கோட்டை கஸ்தூரி அரங்கநாதர் கோவில். இந்த கோவிலில் புரட்டாசி மாதம் முழுவதும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவதோடு பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டுகள் வழங்கப்படுவதும் வாடிக்கையான ஒன்றாக இருந்து வருகிறது.

இன்று புரட்டாசி சனிக்கிழமை என்பதால் கோயில் வளாகம் முழுவதுமே செவ்வந்தி, செண்டுமல்லி உள்ளிட்ட மலர்களைக் கொண்டு பக்தர்கள், கோவில் பணியாளர்கள் நேற்று முழுவதும் மாலை கட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர்.

மேலும் அரங்கனை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு வழங்குவதற்காக பத்தாயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்றது.

இன்று புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதலே அரங்கனை தரிசிக்க கோவிலுக்கு வர துவங்கியுள்ளனர். கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in