சர்வதேச லைசென்ஸ் எடுத்து பைக் ஓட்டுவேன்! ஜாமீனில் வந்த டிடிஎஃப் வாசன் மீண்டும் அடம்

டிடிஎஃப் வாசன்
டிடிஎஃப் வாசன்

சர்வதேச லைசென்ஸ் எடுத்து தொடர்ந்து பைக் ஓட்டுவேன் என ஜாமீனில் சிறையிலிருந்து வெளியே வந்துள்ள யூடியூபர் டிடிஎஃப் வாசன் தெரிவித்துள்ளார்.

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன், சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாலுசெட்டி சத்திரம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது சாகசம் செய்ய முயன்றார். அப்போது நிலை தடுமாறி அவர் கீழே விழுந்ததில் அவர் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவிய நிலையில், காஞ்சிபுரம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரை, போலீஸார் கைது செய்தனர்.

ஜாமீனில் வெளிவர முடியாத அளவுக்கு வாசன் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தது. இதனிடையே அவரது ஓட்டுநர் உரிமத்தை அடுத்த 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்த நிலையில் புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த டிடிஎஃப் வாசனுக்கு சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து இன்று சிறையிலிருந்து வாசன் ஜாமீனில் வெளியே வந்தார்.

டிடிஎஃப் வாசன்
டிடிஎஃப் வாசன்

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”விபத்தில் கை போனதை விட லைசென்ஸ் போனபோதுதான் மனம் வருந்தி கண்கலங்கி விட்டேன். தொடர்ந்து பைக் ஓட்டுவேன், சினிமாவில் நடிப்பேன். ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்பட்டு இருப்பதால் சர்வதேச ஓட்டுநர் உரிமம் பெற விண்ணப்பிக்கலாம். மேல்முறையீடு செய்வது தொடர்பாக ஆலோசிப்பேன். சிறுவர்களை பெற்றோர் ஏன் அதிவேக வாகனங்களை ஓட்ட அனுமதிக்கிறார்கள்? என்னைப் பார்த்து மற்றவர்களும் செய்வார்கள் என்று சொல்வது தவறானது. நாம் தான் குழந்தைகளுக்கு சரி தவறு எது என்பதை சொல்லிக்கொடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in