ஆன்லைன் ரம்மி
ஆன்லைன் ரம்மி

ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ரூ.7 லட்சம் கடன்... இளைஞர் எடுத்த பரிதாப முடிவு

Published on

நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் 7 லட்சம் ரூபாய் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாடி பணத்தை பறிக் கொடுத்த நிலையில், கொடுத்த கடனை திருப்பிக் கேட்டு நெருக்கடி கொடுத்ததால் பட்டதாரி இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த பரமேஸ்வர மங்கலம் கிராமத்தை சேர்ந்த பட்டதாரி இளைஞர் விஜயகுமார், வேலையின்றி இருந்துள்ளார். இவர் தாய் நடத்திவரும் தள்ளுவண்டி டிபன் கடை வியபாரத்தை கவனித்து வந்துள்ளார்.

இந்நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஆர்வம் கொண்ட இவர், பலரிடம் 7 லட்ச ரூபாய் வரை கடன் பெற்று, அதனை இழந்துள்ளார். கடனை கேட்டு நெருக்கடி கொடுத்ததால், மனஉளைச்சலுக்கு ஆளான விஜயகுமார் பூச்சி மருந்தை குடித்து உயிரை மாய்த்து கொண்டுள்ளார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

x
காமதேனு
kamadenu.hindutamil.in