
வாலிபரின் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்த 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ள சம்பவம் ஆவடியில் நிகழ்ந்திருக்கிறது.
திருவள்ளுவர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள கன்னிமாபுரத்தில் கடந்த 22ம் தேதி தலை சிதைந்த நிலையில் வாலிப வாலிபரின் உடல் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், சடலத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது நடத்தப்பட்ட விசாரணையில் உயிரிழந்த வாலிபரின் பெயர் விக்கி என்று தெரியவந்தது.
இது தொடர்பாக சோழவரத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, தனது நண்பர்கள் 5 பேருடன் சேர்ந்து விக்கிக்கு அளவுக்கு அதிகமாக மதுவாங்கி கொடுத்து தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 6 பேரையும் கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.