
மதுரை அருகே ஜாமீனில் வந்த இளைஞர் நள்ளிரவில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பரவை பகுதியில் உள்ள தெருவில் இளைஞர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடப்பதாக சமயநல்லூர் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதைத்தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட நபர் மதுரை தத்தனேரியைச் சேர்ந்த ராம்குமார் (25) என்பது தெரியவந்தது. இவர் வாடிப்பட்டியில் பார் நடத்தி வந்துள்ளார். அதற்கான உரிமம் ரத்தானது.
இதையடுத்து, பரவையில் உள்ள மார்க்கெட் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்று வந்துள்ளார். இது தொடர்பாக கடந்த ஜூலை மாதம் சமயநல்லூர் போலீஸார் கைது செய்தனர். அந்த வழக்கில் தற்போது ஜாமீனில் வந்திருந்தார்.
இந்நிலையில் அவரை மர்ம நபர்கள் வெட்டிக் கொலை செய்துள்ளனர். கொலை தொடர்பாக அப்பகுதியில் சுற்றிய இருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
அதில், இருவரும் ராம்குமாரிடம் மது கேட்டதாகவும், அவர் பணம் கேட்கவே, இரண்டு நாட்கள் கழித்து தருவதாக கூறியதால், வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து ராம்குமாரை கத்தியால் சரமாரி வெட்டிக் கொலை செய்ததும் தெரியவந்தது. ஜாமீனில் வந்த இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
அதிர்ச்சி... வேர்ல்டு கப் பைனல்... நடிகர் அமிதாப் பச்சனுக்கு தொடர்ந்து மிரட்டல்!
பிக் பாஸ் வீட்டில் ரணகளம்... விசித்ராவுடன் மல்லுக்கட்டிய நிக்ஸன்!
விஜய்சேதுபதி, மஞ்சுவாரியருக்காக புது டெக்னாலஜி... தமிழ் சினிமாவின் அடுத்த பாய்ச்சல்!
வீலிங் செய்து எமனுக்கு காலிங்... டூ வீலரில் இளைஞரின் அட்டகாசம்!
குட் நியூஸ்... இனி புக் செய்த அனைவருக்கும் ரயில் டிக்கெட்; ரயில்வேயின் புதிய திட்டம்!