கஞ்சா போதையில் பயங்கரம்... மாமல்லபுரம் கடற்கரையில் குதிரை ஓட்டும் வாலிபர் வெட்டிக்கொலை

மாமல்லபுரம் கடற்கரையில் வாலிபர் வெட்டிக்கொலை
மாமல்லபுரம் கடற்கரையில் வாலிபர் வெட்டிக்கொலை

மாமல்லபுரம் கடற்கரையில், கஞ்சா போதையில் வாலிபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூரை சேர்ந்த ரூபன் என்கிற உடும்பன்(23) கடந்த 5 ஆண்டுகளாக மாமல்லபுரம் ஒத்தவாடை தெரு பகுதியைச் சேர்ந்த ஒருவரிடம் குதிரை ஓட்டும் தொழில் செய்து வருகிறார். மாமல்லபுரம் கடற்கரைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளை குதிரையில் அழைத்துச் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். இன்று காலை மாமல்லபுரம் கடற்கரை கோயில் அருகே உள்ள கடற்கரையில், உடும்பன் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

மாமல்லபுரம் போலீஸார் தீவிர விசாரணை
மாமல்லபுரம் போலீஸார் தீவிர விசாரணை

தகவல் அறிந்த மாமல்லபுரம் போலீஸார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று இரவு அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் சிலருக்கும் உடும்பனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் தொடர்ச்சியாக கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது தொடர்பாக 5 பேரை பிடித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அவர்கள் அனைவரும் கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் மாமல்லபுரம் கடற்கரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in