பீர் பாட்டிலால் அடித்து வாலிபர் கொலை... நள்ளிரவு பார்ட்டியில் நடந்த பயங்கரம்!

கொலை நடந்த இடத்தில் போலீஸ் விசாரணை
கொலை நடந்த இடத்தில் போலீஸ் விசாரணை

நள்ளிரவில் பார்ட்டி முடிந்து உறங்கிக் கொண்ருடிருந்த வாலிபர் பீர் பாட்டிலால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், கடக் மாவட்டம், முரண்டரகி நகரின் நியூ ஹட்கோ காலனியில் ஒரு இளைஞர் தலையில் காயங்களுடன் இன்று இறந்து கிடந்தார். இதைப் பார்த்த பொதுமக்கள், முண்டரகி போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அங்கு விரைந்த போலீஸார், கொலை செய்யப்பட்டு கிடந்த இளைஞரின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். அவர் ஹைதர் நகர் தாண்டாவைச் சேர்ந்த சுபாஷ் நாயக்(23) என்பது தெரிய வந்தது. நேற்று நள்ளிரவில் மது பார்ட்டியின் போது இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீஸார் சந்தேகப்படுகின்றனர். சுபாஷ் நாயக் நண்பர்களைப் பிடித்து போலீஸார் விசாரணை நடத்தினர்.

அப்போது ஊருக்கு ஒதுக்குப்புறமான பகுதியில் நேற்று மது பார்ட்டி நடந்துள்ளது. அதில் சுபாஷ் நாயக் உள்பட மூன்று பேர் கலந்து கொண்டுள்ளனர். மது குடித்து விட்டு அங்கேயே உறங்கி விட்டதாகவும், எழுந்து பார்த்த போது சுபாஷ் நாயக் பீர் பாட்டிலால் தலையில் அடித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தார் என்று அவரது நண்பர்கள் கூறினர். ஆனால், சுபாஷின் நண்பர்கள் கூறியது போலீஸாருக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சுபாஷ் நாயக் உடலை பிரேத பரிசோதனைக்காக போலீஸார் அனுப்பி வைத்தனர்.

மேலும், சம்பவ இடத்திற்கு தடவியல் நிபுணர்கள், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. நியூ ஹட்கோ காலனி பகுதியில் போலீஸார், கொலைக்கான ஆதாரம் தேடினர். மேலும், இக்கொலை தொடர்பாக வழக்குப்பதிவு தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவு மது பார்ட்டியில் இளைஞர் பீர் பாட்டிலால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

அதிர போகுது மதுரை... அரசியல் மாநாட்டிற்கு தேதி குறித்த விஜய்!

கோடை விடுமுறையில் சோகம்... ஏரியில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி!

ஹஜ் பயணிகளின் புனித பயணம் தொடங்கியது... டெல்லியில் இருந்து முதல் விமானம் புறப்பட்டது!

எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு குட்நியூஸ்ட்... பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு!

ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்... விமான நிலையத்தில் பரபரப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in