இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் தலை நசுங்கி இளைஞர் உயிரிழப்பு!

இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதியதில் தலை நசுங்கி இளைஞர் உயிரிழப்பு!

மதுரை பொன்மேனி நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ். இவர் இன்று காலை சம்பட்டிபுறத்தில் இருந்து காளவாசல் பைபாஸ் பகுதியில் உள்ள சந்திப்புக்குத் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அவரது பக்கவாட்டில் வந்துகொண்டிருந்த லாரியின் முன் பக்கத்தில் எதிர்பாராதவிதமாக ஆரோக்கியராஜ் மோதியதால் நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இதில், லாரியின் பின் சக்கரம் அவரது தலையில் ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த, திடீர்நகர் போக்குவரத்து புலனாய்வு காவல் துறையின் சிறப்பு சார்பு ஆய்வாளர் கணேசன் உள்ளிட்ட போலீஸார் ஆரோக்கியராஜின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்விற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

தொடர்ந்து, விபத்தை ஏற்படுத்தியதாக லாரி ஓட்டுநர் பிரபு என்பவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in