மாமன் மகள் கிடைக்கலை... விரக்தியில் தற்கொலை செய்த இளைஞர்!

மாமன் மகள் கிடைக்கலை... விரக்தியில் தற்கொலை செய்த இளைஞர்!

தனது தாய்மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள முடியாத விரக்தியில் வாலிபர் ஒருவர் தற்கொலைச் செய்து கொண்டுள்ள சம்பவம் சென்னை திருவொற்றியூர் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

சென்னை திருவொற்றியூர் ராஜாஜி நகர், கக்கன் தெருவில் வசித்து வருபவர் முருகன். இவரது மகன் செல்வநாதன் (24) எண்ணூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர், தனது மாமன் மகளை தீவிரமாக காதலித்து வந்துள்ளார்.  ஆசைப்பட்ட அவரையே திருமணம் செய்து கொண்டு ஆனந்தத்துடன் வாழ வேண்டுமென்று அவர் கனவு கண்டார்.

அதனால் அவரை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று பெற்றோரிடம் கேட்டுள்ளார் ஆனால் வாலிபரின் பெற்றோர் அதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை. மேலும் அவசர, அவசரமாக வேறிடத்தில் பெண் பார்த்து திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

”மாமன் மகளைத் தான் திருமணம் செய்து கொள்வேன், வேறிடத்தில் பெண் பார்க்க வேண்டாம்'' என்று பெற்றோரிடம் பிடிவாதமாக செல்வநாதன் பலமுறை கூறியுள்ளார். 

இருப்பினும் அவர்கள் அதற்கு சம்மதிக்காமல் வேறு இடத்தில் பெண் பார்த்துக் கொண்டிருந்தனர். வேறு இடத்தில் பெண் பார்த்தால் நான் வாழ மாட்டேன். தற்கொலைச் செய்து கொள்வேன் என்று செல்வநாதன் கூறியிருந்திருக்கிறார். அதற்கும் பெற்றோர் வழிக்கு வராத நிலையில்  மனமுடைந்த செல்வநாதன், நேற்றிரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.  

இதுபற்றி தகவல் கிடைத்ததும் சாத்தங்காடு போலீஸார் வந்து செல்வநாதனின் உடலை மீட்டு  பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் இது சம்பந்தமாக வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். மாமன் மகள் கிடைக்காத வருத்தத்தில் மனமுடைந்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டிருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in