பகீர்... கையெடுத்து கும்பிடும் முதியவர்; இரும்பு கம்பியால் தாக்கிய கொடூர இளைஞர்!

பகீர்... கையெடுத்து கும்பிடும் முதியவர்; இரும்பு கம்பியால் தாக்கிய கொடூர இளைஞர்!

திண்டுக்கல்லில் முதியவர் ஒருவரை இளைஞர் இரும்பு கம்பியால் தாக்கும் சிசிடிவி காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழநிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். எப்போதும் பரபரப்பாக காணப்படும் அடிவாரம் , பேருந்து நிலையம், சன்னதி விதி , கிரிவலபாதை உள்ளது. இங்கு முதியவர்கள், மனநல பாதிக்கப்பட்டவர்கள், வீடற்று சாலையோரத்தில் தங்கியிருக்கும் நபர்களை சிலர் பணம் கேட்டு மிரட்டி தாக்குவதும் சம்பவங்கள் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

அதேபோல் நேற்று அதிகாலை சாலையோரத்தில் படுத்திருந்த முதியவர் ஒருவரை குடிபோதையில் வந்த ஒருவன் இரும்பு கம்பிகளால் தாக்கி துரத்தி வருகிறார். அப்போது அந்த முதியவர் டீக்கடையில் தஞ்சமடைகிறார். கடைக்காரர் தடுத்து அவரை அடிக்க விடாமல் தடுத்தும் அந்த இளைஞர் இரும்பு கம்பியால் தாக்குகிறார்.

பின்னர் முதியவர் கையெடுத்து கும்பிட்டு கெஞ்சுவதும் , மீண்டும் மீண்டும் அந்த முதியவரை அந்த நபர் அநாகரிகமாகவும் , ஆபாசமாகவும் திட்டுவது குறித்த சிசிடிவி காட்சிகள் இணையத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சிசிடிவி காட்சிகளை வைத்து அடிவாரம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in