திருமண ஆசைக்காட்டி மாணவி கடத்தல்... போக்சோவில் இளைஞர் கைது!

இளைஞர் கைது
இளைஞர் கைது

கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை அருகே பள்ளி மாணவியை கடத்திய இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

16 வயது மாணவி ஒருவர் தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். அண்மையில் இரவு நேரத்தில் மாணவி வெளியே செல்வதாக கூறி வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றார். ஆனால், அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.

அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மகளை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவர் கிடைக்காததால், புதுப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணையை தொடங்கினர்.

அதில், புதுப்பேட்டை அருகே எஸ்.ஏரிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த மதுசூதனன் என்பவரின் மகன் எலக்ட்ரீசியன் விஜயராமன் (21) என்பவர் திருமண ஆசைவார்த்தை கூறி மாணவியை கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் இளைஞரை போலீஸார் கைது செய்து மாணவியை மீட்டனர். இந்த சம்பவம் புதுப்பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in