பயங்கரம்... திருமணம் செய்துவைக்க மறுப்பு! சிறுமிக்கு 10 தடவை கத்திக்குத்து! தாயார் கண்முன்னே வாலிபர் வெறிச்செயல்

பயங்கரம்... திருமணம் செய்துவைக்க மறுப்பு! சிறுமிக்கு 10 தடவை கத்திக்குத்து! தாயார் கண்முன்னே வாலிபர் வெறிச்செயல்

நெருங்கிப் பழகிய சிறுமியை திருமணம் செய்து வைக்க தாயார் மறுத்ததால் அவரது கண்முன்னே மகளை வாலிபர் படுகொலை செய்த அதிர்ச்சி சம்பவம் மகாராஷ்டிராவில் நடந்துள்ளது.

மகாராஷ்டிராவின் கல்யாண் மாவட்டத்தை சேர்ந்த ஆதித்யா காம்ப்ளே (20) என்ற வாலிபர் டீஸ்கான் பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமியுடன் நெருங்கிப் பழகி வந்துள்ளார். இந்தநிலையில் சிறுமியின் வீட்டிற்கு சென்ற அந்த வாலிபர், சிறுமியை திருமணம் முடித்து வைக்கும்படி பெற்றோரிடம் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார், அந்த வாலிபருடன் கடும் வாக்குவாதம் செய்துள்ளார். தனது பெண்ணை திருமணம் முடித்து தர முடியாது என்று கூறி விட்டார் தாயார். இதனால் ஆத்திரம் அடைந்த வாலிபர், தாயின் கண் முன்னரே சிறுமியை 10க்கும் அதிகமான முறை கத்தியால் குத்தி வாலிபர் படுகொலை செய்துள்ளார். இதையடுத்து, அந்த வாலிபர் தற்கொலை செய்ய முயன்றுள்ளார்.

இதையடுத்து, அந்த வாலிபரை காவல்துறையினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த வாலிபர் பெயர் காம்ப்ளே என தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது கொல்சேவடி காவல்துறையினர் இந்திய தண்டனை சட்டம் பிரிவுகள் 302 கொலை செய்தல், 309 தற்கொலைக்கு முயலுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தாயார் கன்முன்னே மகளை வாலிபர் படுகொலை செய்த சம்பவம் மகாராஷ்டிராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in