போலீஸ் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம்: முதல்வருக்கு கொலைமிரட்டல் விடுத்த தென்காசி வாலிபர்!

போலீஸ் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம்: முதல்வருக்கு கொலைமிரட்டல் விடுத்த தென்காசி வாலிபர்!

முதல்வர் ஸ்டாலின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னையில் நேற்றிரவு 11.30 மணிக்கு காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குப்பேசிய மர்மநபர், முதல்வர் ஸ்டாலின் வீட்டில் குண்டு வெடிக்கும் எனக்கூறி போன் இணைப்பைத் துண்டித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கட்டுப்பாட்டு அறை காவலர்கள், உடனடியாக தேனாம்பேட்டை காவல்நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாயுடன் ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் வீட்டில் சோதனை நடத்தினர். ஆனால், அங்கு சந்தேகப்படும்படி எந்த பொருளும் கிடைக்கவில்லை. இதையடுத்து காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு வந்த எண்ணைக் கொண்டு விசாரித்தனர்.

அப்போது தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகேயுள்ள தாட்டான்பட்டி கிராமத்தை சேர்ந்த அந்தோணிராஜ் (34) என்பவர் போன் தான் இந்த மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. கடந்த 23-ம் தேதி இடப்பிரச்சினை தொடர்பாக ஆழ்வார்குறிச்சி காவல்நிலையத்தில் புகார் மனு கொடுத்தும், அது மீது உரிய விசாரணை மேற்கொள்ளாத விரக்தியால் முதல்வர் தனிப்பிரிவுக்கு இரவு போதையில் போனில் அவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in