கோவை மேட்டுப்பாளையத்தில் காதல் திருமணம் செய்து கணவனை பிரிந்த 18 வயது இளம் பெண்ணை, ஆசை வார்த்தை கூறி மயக்கி, பலருக்கும் விருந்தாக்கி பணம் சம்பாதித்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் அந்த 18 வயது இளம்பெண். இவர் பெற்றோரை எதிர்த்து தான் காதலித்தவரை காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே, கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அவரை பிரிந்துள்ளார். கணவரை பிரிந்த பின்னர் அதே பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கி வசித்து வந்திருக்கிறார்.
அந்த இளம்பெண் தனியாக வசிப்பதை கண்ட பாபு சிவேஷ் (26) என்ற இளைஞர், அவரிடம் ஆறுதலாக பேசி பழகி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த பெண்ணிடம் உன்னை நான் திருமணம் செய்து கொண்டு நன்றாக வாழ வைப்பேன் என்று ஆசை வார்த்தைகளையும் கூறினாராம். இதை நம்பிய அந்தப் பெண், பாபு சிவேஷுடன் மேட்டுப்பாளையத்துக்கு சென்றுள்ளார்.
மேட்டுப்பாளையத்தில் ராமசாமி நகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியுள்ளனர். நல்ல பிள்ளையாக இருந்துவந்த பாபு சிவேஷ் ஒரு கட்டத்தில் தனது சுயரூபத்தை காட்டியுள்ளார். தனது நண்பர் ரமேஷ் என்பவரை வீட்டிற்கு அழைத்து வந்து அவருடன் சேர்ந்து மது அருந்தி உள்ளார். பின்னர் அந்த இளம்பெண்ணை மிரட்டி 2 பேரும் ஒன்றாக சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
நடந்த சம்பவத்தை வெளியில் யாரிடமாவது கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார்கள். இதனால் பயந்த இளம்பெண் நடந்த சம்பவங்களை யாரிடமும் சொல்லாமல் இருந்துள்ளார். பாபு சிவேசும் அவரது நண்பர் ரமேசும், மாதக்கணக்கில் வீட்டில் அடைத்து வைத்து இளம்பெண்ணை அவ்வப்போது பாலியல் பலாத்காரம் செய்து வந்தனர்.
இதோடு விடாமல் கோவை மற்றும் ஊட்டி ஆகிய பல்வேறு பகுதிகளில் உள்ள ஓட்டல்களுக்கு அழைத்து சென்று பலருக்கும் விருந்தாக்கி பணம் சம்பாதித்து வந்துள்ளார்கள். ஒரு கட்டத்தில் கொடுமை தாங்க முடியாமல் அந்த இளம்பெண், பாபு சிவேஷிடம் இருந்து தப்பித்து வந்து நடந்த சம்பவங்களை உறவினர்களிடம் கூறி கதறி அழுதிருக்கிறார். இதனைக்கேட்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்து இதுகுறித்து மேட்டுப்பாளையம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இந்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீஸார் உடனடியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் தொடர்புடைய ராகுல், நீலகிரி மாவட்டம் கூடலூர் சேரம்பாடி செந்தில்குமார் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முக்கிய குற்றவாளியான பாபு சிவேசை போலீஸார் தீவிரமாக தேடி வந்த நிலையில், நேற்று முன் தினம் இரவு அவரை கைது செய்தனர்.
பின்னர் பாபு சிவேஷை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய பாபுவின் நண்பர் ரமேஷ் என்பவர் உள்பட பெண்ணை பலாத்காரம் செய்த பலரையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
வங்கிகளுக்கு பறந்த புதிய உத்தரவு... வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி!
தமிழகத்தின் வளர்ச்சிக்கு ஆளுநர் தடையாக உள்ளார்- அமைச்சர் சேகர்பாபு ஆவேசம்!
யாரை ஏமாற்ற கூட்டம் நடத்துகிறீர்கள்?- ராமதாசுக்கு காடுவெட்டி குரு மகள் கேள்வி!
33 வருடம்... என் இதயம் மகிழ்ச்சியால் துள்ளுகிறது! அமிதாப்புடன் நடிக்கும் ரஜினி நெகிழ்ச்சி!