`சார், பணத்தை அனுப்புங்க, ஐபோன் தர்றேன்'

டி.ஜி.பி கார் ஓட்டுனரிடம் ரூ.12 ஆயிரத்தை ஏமாற்றிய பட்டதாரி வாலிபர் கைது
`சார், பணத்தை அனுப்புங்க, ஐபோன் தர்றேன்'

OLX-ல் குறைந்த விலைக்கு I-Phone தருவதாக விளம்பரம் செய்து டி.ஜி.பி கார் ஓட்டுநரிடம் 12 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த பட்டதாரி வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை மயிலாப்பூர் காவலர் குடியிருப்பைச் சேர்ந்த ஆயுதப்படை காவலர் சுந்தர்ராஜா(31). இவர் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை டி.ஜி.பி-க்கு கார் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 14-ம் தேதி சுந்தர் ராஜா OLX இணையதளத்தில் செல்போன் வாங்குவதற்காக தேடிய போது, 3 I-Phone 11 ஆயிரத்து 700 ரூபாய்க்கு விற்பனைக்கு உள்ளது என்ற விளம்பரத்தை பார்த்துள்ளார். உடனே காவலர் சுந்தர் ராஜா விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்த செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டு பேசினார். அப்போது எதிர்முனையில் பேசிய நபர், பணத்தை அனுப்பியுடன் அடுத்தநாள் செல்போனை அனுப்புவதாக தெரிவித்துள்ளார். இதனை நம்பிய சுந்தர் ராஜா அவரது வங்கி கணக்கிற்கு 11 ஆயிரத்து 700 ரூபாய் பணத்தை அனுப்பியுள்ளார்.

டி.ஜி.பி கார் ஓட்டுனரிடம் ரூ.12 ஆயிரத்தை ஏமாற்றிய பட்டதாரி வாலிபர்  காளிதாஸ்
டி.ஜி.பி கார் ஓட்டுனரிடம் ரூ.12 ஆயிரத்தை ஏமாற்றிய பட்டதாரி வாலிபர் காளிதாஸ்

பின்னர் பல நாட்கள் ஆகியும் செல்போன் டெலிவரி செய்யப்படாததால் சந்தேகமடைந்த காவலர் சுந்தர்ராஜா அந்த நபரின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டபோது ஸ்விட்ச் ஆப் ஆகியிருந்தது. இந்நிலையில், சூளைமேடு காவல் நிலையத்தில் சுந்தர்ராஜா நேற்று புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் சூளைமேடு காவல்துறையினர் மோசடி உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் மோசடி நபர் பேசிய செல்போன் எண்ணை வைத்து ஆய்வு சொந்த போது சூளைமேடு திருவள்ளுவர் புரம் பகுதியில் இருப்பதாக காண்பித்தது. உடனடியாக அங்கு சென்ற காவல்துறையினர், ஏமாற்றிய நபரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த பட்டதாரி வாலிபர் காளிதாஸ்(23) என்பது தெரியவந்தது. தனியார் ஆன்லைன் நிறுவனத்தில் டீலராக பணிபுரிந்து வந்த காளிதாஸ், கடந்த 2 மாதத்திற்கு முன்பு சென்னைக்கு வந்து வாடகைக்கு குடோன் ஒன்றை எடுத்து Future Traders என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்தது தெரியவந்தது. மேலும், காளிதாஸிடம் இருந்து 100-க்கும் மேற்பட்ட எலக்ட்ரானிக் பொருட்களின் பில்கள், 6 ஏடிஎம் கார்டுகள் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். இதேபோல யாரை எல்லாம் காளிதாஸ் ஏமாற்றி உள்ளார்? இவர் தனியாக செய்தாரா? அல்லது இவருக்கு பின்னால் மோசடி கும்பல் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.