2 ஆண்டுகளாக தொடர்ந்து டார்ச்சர்: பாஜக பிரமுகரால் உயிரை மாய்க்க முயன்ற இளம் பெண்

2 ஆண்டுகளாக தொடர்ந்து டார்ச்சர்: பாஜக பிரமுகரால் உயிரை மாய்க்க முயன்ற இளம் பெண்

"என்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும்" என்று கடந்த இரண்டு ஆண்டுகளாக பாஜக இளைஞரணி மாவட்ட செயலாளர் கொடுத்த டார்ச்சரால் கணவனை இழந்த இளம் பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் திண்டுக்கல்லில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் குடை பாறைப்பட்டி, பெரியாண்டவர் நகரைச் சேர்ந்த மனிஷா என்ற 25 வயது பெண்ணை குமரேசன் என்பவர் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 5 வயதில் மகள் இருக்கிறார். இதனிடையே, கடந்த 2018-ம் ஆண்டு கணவர் குமரேசன் படுகொலை செய்யப்பட்டார். இதனால், தனது தாய், தங்கையுடன் மனிஷா வசித்து வருகிறார்.

இந்நிலையில் சோலைஹால் பகுதியைச் சேர்ந்த பாஜக இளைஞரணி மாவட்ட செயலாளர் தினேஷ் குமார், தான் குமரேசனின் சகோதரர் எனக்கூறி அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார். இந்த சூழ்நிலையில், தன்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ளுமாறு கடந்த இரண்டு ஆண்டுகளாக மனிஷாவுக்கு டார்ச்சர் கொடுத்து வந்துள்ளார் தினேஷ் குமார். இவரின் செயலால் மனிஷா வேதனை அடைந்ததோடு, அவரது திருமண ஆசைக்கு மறுத்துவந்துள்ளார்.

இதனிடையே, மனிஷா குடும்பத்தினர் மீது காவல் நிலையத்தில் தினேஷ் குமார் பொய் புகார் கொடுத்ததோடு, குடும்பத்தினரை மிரட்டியும் வந்துள்ளார். இதனால் வேதனையடைந்த மனிஷா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைப் பார்த்த சகோதரி, மனிஷாவை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், எனது சகோதரியை கட்டாய திருமணம் செய்து கொள்ளும்படி டார்ச்சர் கொடுத்து வரும் தினேஷ் குமார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மனிஷாவின் சகோதரி சீமாதேவி வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in