தற்கொலை செய்து கொண்ட ஆஷா.
தற்கொலை செய்து கொண்ட ஆஷா.

5 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை..... மாமியார் சித்ரவதை தாங்காமல் தூக்கில் தொங்கிய இளம்பெண்!

திருமணமாகி 5 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை என கணவன் மற்றும் அவரது குடும்பத்தினர் தொடர்ந்து கொடுமைப்படுத்தியதால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

கர்நாடகா மாநிலம், சித்ரதுர்கா மாவட்டம், ஹோசதுர்கா தாலுகாவில் உள்ள மட்டோடு கிராமத்தைச் சேர்ந்தவர் ஆஷா(26). இவருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. ஆனால், குழந்தை இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவரது கணவர் மற்றும் மாமியார் ஆகியோர் ஆஷாவை கொடுமைப்படுத்தி வந்துள்ளனர்.

பேக்கரியில் வேலை செய்து வந்த ஆஷாவை பெற்றோர் வீட்டிற்கே அனுப்பி விடுமாறு அவரது மாமியார் டார்ச்சர் செய்துள்ளார். ஆஷாவின் கணவரும், அவரது குடும்பத்தினரும் அன்றாடம் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். இதனால் அவர், மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில், இன்று காலை வீட்டின் கழிவறையில் தூக்கிட்டு ஆஷா தற்கொலை செய்து கொண்டார்.

இதுதொடர்பாக தகவல் அறிந்த ஸ்ரீராம்புரா காவல் நிலைய போலீஸார் விரைந்து சென்று ஆஷாவின் உடலை மீட்டு விசாரணை நடத்தினர். இதன் பின் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தை இல்லை என்று கொடுமைப்படுத்தியால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

#BREAKING: பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது நடடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

நடுரோட்டில் திமுக நிர்வாகி படுகொலை... விருதுநகரில் பரபரப்பு!

குழந்தை பிறப்பு பிரச்சினைக்கு திரவுபதி உதாரணம்: சர்ச்சையில் சிக்கிய அஜித்பவார்!

ரவுண்டு கட்டிய விஜய் ரசிகர்கள்... இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்த யுவன் ஷங்கர் ராஜா?!

மோசடி வழக்கு: நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் ரூ.97 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்!

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in