
திருச்சி அருகே செல்போனில் பேசிக்கொண்டிருந்த வாலிபர் மின்னல் தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம், லால்குடி அருகே பல்லவபுரம் பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் குமளூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தற்காலிக ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று மாலை முதல் லால்குடி பகுதியில் பலத்த இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கனமழை பெய்தது. அப்போது வீட்டில் இருந்த ஜெயக்குமார், ப்ளூடூத்தில் தனது செல்போனில் நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக ஜெயக்குமார் மீது மின்னல் தாக்கியது. இதில் படுகாயம் அடைந்து மயங்கி விழுந்த ஜெயக்குமாரை, குடும்பத்தினர் உடனடியாக சிகிச்சைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த லால்குடி போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மழைக்காலங்களில் வெட்டவெளி அல்லது மரங்களுக்கு அடியில் நிற்பதை தவிர்க்க வேண்டும் என வானிலை ஆய்வு மையமும், வருவாய்த் துறையினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
நெகிழ்ச்சி... வேலைக்கு அனுப்பிய பெற்றோர்! முதலாளியால் பட்டம் பெற்ற மாணவிகள்!
ஹனிமூனில் அசோக்செல்வனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த கீர்த்தி பாண்டியன்!
மேலும் 38 மீனவர்கள் விடுதலை- நிபந்தனைகளுடன் விடுவித்தது இலங்கை நீதிமன்றம்
பயங்கரம்... ஓடும் பேருந்தில் திடீரென பற்றி எரிந்த தீ... உடல் கருகி 2 பேர் பலி
தீபாவளிக்கு வெளியாகும் படங்கள் என்னென்ன? எகிறும் எதிர்பார்ப்பு!