
காரில் பயணம் செய்த இளம் பெண் ஒருவர் கொடூரமாக குத்திக்கொலை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் டெல்லியில் நடந்திருக்கிறது.
தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை நிலவி வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு நிர்பயா என்ற பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில் டெல்லியில் மீண்டும் ஒரு கொடூர சம்பவம் நடந்திருக்கிறது.
டெல்லி சாகேத்தில் கௌரவ் என்பவர் இளம்பெண்ணை காரின் பின் இருக்கையில் வைத்து கத்தியால் பலமுறை குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். கடந்த சில நாட்களாக அந்தப் பெண் தன்னை புறக்கணித்ததால் ஆத்திரமடைந்த கௌரவ் இந்த கொலையை செய்துள்ளதாக தெரிகிறது. இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.