நிமிஷா பிரியா மீதான மரண தண்டனை... உறுதி செய்தது ஏமன் உச்ச நீதிமன்றம்

நிமிஷா பிரியா
நிமிஷா பிரியா

ஏமன் நாட்டில் கொலை வழக்கு ஒன்றில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நிமிஷா பிரியா என்ற கேரள நர்ஸின் மேல்முறையீட்டு மனுவை ஏமன் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை அடுத்து, அவருக்கு மரண தண்டனை உறுதியாகி உள்ளது.

மகளைக் காப்பாற்றுவதற்காக ஏமனுக்கு பயணிக்க திட்டமிட்ட நிமிஷாவின் தாயார், அதற்காக அனுமதிக்கக் கோரி இந்தியாவில் நடத்தி வரும் சட்டப் போராட்டத்தில் முக்கிய திருப்பம் நிகழ்ந்துள்ளது.

கேரளாவைச் சேர்ந்த நிமிஷா பிரியா என்ற நர்ஸ் ஏமனில் 2017-ம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிரான கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டார். இந்த தீர்ப்புக்கு எதிரான நிமிஷாவின் மேல்முறையீட்டு மனுவை ஏமன் உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. இதனால் நிமிஷா மீதான மரண தண்டனை விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது.

நிமிஷா பிரியா
நிமிஷா பிரியா

தனது பாஸ்போர்டை பறித்து வைத்துக்கொண்ட தலால் அப்தோ மஹ்தி என்ற ஏமன் நபரிடம் இருந்து அதனை திரும்பப் பெற நிமிஷா முயன்றார். இதற்கான முயற்சியில் ஒருமுறை அப்தோ மஹ்திக்கு, நிமிஷா மயக்க ஊசி போட்டுள்ளார். இந்த முயற்சியில் உடல்நலன் பாதிப்படைந்த மஹ்தி மரணமடைந்தார். இதனையடுத்து மயக்க ஊசி போட்டு மஹ்தியை கொன்றதாக ஏமன் போலீஸார் நிமிஷாவை கைது செய்தனர்.

மகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதை அறிந்து கேரளாவில் இருக்கும் நிமிஷாவின் தாயார் ஏமன் பயணப்பட முயன்றார். ஆனால் ஏமனில் உள்நாட்டுப் போர் நடப்பதை காரணமாக்கி, அங்கு இந்தியர்கள் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே நிமிஷாவின் தாயார் டெல்லி உயர் நீதிமன்றத்தை அணுகி முறையிட்டுள்ளார்.

நீதிமன்ற உத்தரவு
நீதிமன்ற உத்தரவு

வழக்கை விசாரித்த நீதிமன்றம், ஏமன் செல்வதற்கான பிரியா தாயாரின் கோரிக்கை மீது ஒரு வாரத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியது. நிமிஷாவால் கொல்லப்பட்டவரின் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம், நிமிஷாவை சிறையிலிருந்து விடுவிக்க முடியும் என அவரது உறவினர்கள் நம்புகின்றனர். அரசு பயணத்தடையை தளர்த்தினால் மட்டுமே நிமிஷாவின் தாயார் ஏமன் பயணப்பட முடியும்.

இதையும் வாசிக்கலாமே...

HBD Geminiganesan|தமிழ் சினிமாவின் காதல் மன்னன்... ‘ஜெமினி கணேசன்’ பிறந்தநாள் ஸ்பெஷல்!

HBD Roja|ஆந்திர அரசியலின் பீனிக்ஸ் பறவை நடிகை ரோஜா பிறந்தநாள் ஸ்பெஷல்!

இன்று வங்கக்கடலில் உருவாகிறது 'மிதிலி' புயல்... வானிலை மையம் எச்சரிக்கை!

அதிர்ச்சி அறிவிப்பு: டெல்லி செல்லும் தென்மாவட்ட ரயில்கள் முழுமையாக ரத்து!

அதிர்ச்சி: பயிற்சியின் போது மாரடைப்பால் 30 வயது விமானி உயிரிழப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in