குடிநீரில் புழு; புகார் கூறிய மாணவிகளை தண்டித்த தலைமையாசிரியை!

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள்
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள்

அரசுப் பள்ளியில் குடிநீரில் புழு கிடப்பதாக புகார் அளித்த மாணவிகளை தலைமையாசிரியர் முட்டிப்போட்டு வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

சேலம் மாவட்டம், கோட்டையில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில், பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் தண்ணீர் குடிக்க சென்று இருக்கின்றனர். அப்போது குடிநீரில் புழுக்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி

இதையடுத்து பள்ளி தலைமையாசிரியையிடம் புகார் அளித்துள்ளனர். ஆனால் தலைமையாசிரியை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் புகார் அளித்த இரண்டு மாணவிகளையும் முட்டிப்போட வைத்திருக்கிறார். இது குறித்து வெளியே சொன்னால் டிசி கொடுத்து விடுவேன் என்றும் மாணவிகளை தலைமையாசிரியை மிரட்டி இருக்கிறார். தலைமையாசிரியையின் இந்த செயலால் மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி
அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி

இதனிடையே, மாணவிகளுக்கு சுத்தமான குடிநீரை வழங்க அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் மாணவிகளை மிரட்டிய தலைமையாசிரியை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in