பிறந்து 45 நாட்களே ஆன ஆண் குழந்தைக்கு நள்ளிரவில் பெண்களால் நடந்த கொடூரம்!

பிறந்து 45 நாட்களே ஆன ஆண் குழந்தைக்கு  நள்ளிரவில் பெண்களால் நடந்த கொடூரம்!

பிறந்து 45 நாட்களே ஆன ஆண் குழந்தையை பாட்டி உள்பட 3 பெண்கள் கொடூரமாக கொன்ற சம்பவம் அரக்கோணத்தில் நடந்துள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பஜார் பகுதியை சேர்ந்த மனோ-அம்சா நந்தினி தம்பதிக்கு அண்மையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. பிறந்து 45 நாட்களே ஆன நிலையில் நேற்று நள்ளிரவில் அம்சா நந்தினி தனது குழந்தையுடன் வீட்டில் உறங்கி கொண்டிருந்தார். திடீரென கண்விழித்த அம்சா நந்தினி, அருகில் குழந்தை இல்லாததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து தனது கணவரிடம் கூறிய அம்சா நந்தனி, நள்ளிரவில் குழந்தையை தேடிப் பார்த்துள்ளனர். அப்போது, வீட்டின் அருகே உள்ள கழிவறையில் வாளியில் குழந்தை இறந்து கிடந்ததைப் பார்த்து கதறி அழுதனர்.

இது குறித்து அரக்கோணம் காவல்துறையில் மனோ புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, சந்தேகத்தின் அடிப்படையில் மனோவின் உறவினர்களிடம் காவல்துறையினர் விசாரணை செய்தனர். மனோவுக்கு சொந்தமான வீட்டை அபகரிக்க அவரது அத்தை தேன்மொழி, அவரது மகள் பாரதி மற்றும் பெரியப்பா மகள் அமலு சதித்திட்டம் தீட்டி பச்சிளம் குழந்தையை கொன்றது விசாரணையில் தெரியவந்தது.

மேலும், மனோ-அம்சா நந்தினி தம்பதிக்கு 3 ஆண்டுகள் குழந்தை இல்லாத நிலையில், அவர்கள் குடியிருக்கும் வீட்டை அடைய திட்டமிட்டிருந்ததாகவும், ஆண் குழந்தை பிறந்ததால் ஏமாற்றம் அடைந்ததாகவும், இதனால் குழந்தையை கொன்றதாகவும் அவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதையடுத்து, 3 பேரையும் கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

சொத்துக்காக பச்சிளம் குழந்தையை உறவினர்களே கொலை செய்த சம்பவம் அரக்கோணத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in