ஷாக்... போலி பெண் எஸ்.பி கைது: சீருடை அணிந்து பலரிடம் மிரட்டி பணம், நகை பறித்தது அம்பலம்!

போலி எஸ்.பி நிவேதிதா.
போலி எஸ்.பி நிவேதிதா.

கர்நாடகாவில் எஸ்.பி எனக்கூறி பணம், நகை பறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டம், அகலஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் சுனில். இவரை கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ஒரு இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டார். ஆனால், அவர்களுக்குள் குடும்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அப்போது பாதிக்கப்பட்ட சுனில், ராமநகர் மாவட்டம், மாகாடி தாலுகா, லக்கனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த நிவேதிதாவை சந்தித்து உதவி கோரியுள்ளார்.

ஆண் போல ஒட்டப்பட்ட முடி, மிடுக்கான தோற்றத்துடன் காணப்பட்ட நிவேதிதா, தன்னை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் என சுனிலிடம் கூறியுள்ளார். அத்துடன் எஸ்.பி சீருடை அணிந்து சுனிலின் மனைவி வீட்டிற்கு அவர் சென்றுள்ளார். தான் எஸ்.பி என்றும், விசாரணைக்கு வந்திருப்பதாகவும் கூறியுள்ளார். அத்துடன் அவர்களின் குடும்பத்தினரை மிரட்டிய நிவேதிதா, இளம்பெண்ணின் செல்போனையும் எடுத்துச் சென்றார். மேலும், இளம்பெண்ணின் வீட்டிற்கு சுனிலையும் அழைத்து வந்து நிவேதிதா மிரட்டியுள்ளார்.

போலி எஸ்.பி நிவேதிதா.
போலி எஸ்.பி நிவேதிதா.

இதனால் பயந்து போன இளம்பெண்ணின் குடும்பத்தினர், 20 கிராம் தங்கக் கட்டிகள், 10 கிராம் தங்க மோதிரம், 2,000 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை நிவேதிதாவிடம் கொடுத்துள்ளனர். இதை வாங்கிச் சென்ற நிவேதிதா மீது அவர்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இளம்பெண்ணின் குடும்பத்தினர், இதுகுறித்து பென்ஷன் மொஹல்லா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பாக போலீஸார் விசாரித்த போது, நிவேதிதா மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் எனக்கூறி பலரிடம் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.

அத்துடன் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சீருடை அணிந்து பல பள்ளிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைமை விருந்தினராக பங்கேற்றதும் தற்போது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து நிவேதிதாவை போலீஸார் நேற்று கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெண் எஸ்.பி எனக்கூறி பெண் ஒருவர் மோசடியில் ஈடுபட்ட சம்பவம் ஹாசன் மாவட்ட காவல் துறையினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in