அழுத குழந்தையின் மூக்கு மற்றும் வாயை தந்தையின் சகோதரி மூடியதால் 2 வயதான குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் நகரை சேர்ந்தவர் முகமது ஷகீல். இவர் தனது 2 வயதான குழந்தையை காணவில்லை என போலீஸில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் முகமது ஷகீல் தங்கையின் அறையில் உள்ள கட்டிலின் அடியில் குழந்தையின் உடல் இருப்பதைக் கண்டுபிடித்தனர்.
இதனைத்தொடர்ந்து தங்கையிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், குழந்தை தூங்க விடாமல் தொந்தரவு செய்ததால் அடித்ததாகவும், வலி தாங்க முடியாமல் குழந்தை அழுதால் மூக்கு மற்றும் வாயை மூடியதால் குழந்தை இறந்துவிட்டதாகவும், அதனை மறைக்க குழந்தையின் உடலை கட்டிலின் அடியில் போட்டதாக தெரிவித்துள்ளதாக ஜபல்பூர் நகர் காவல் அதிகாரி தெரிவித்துள்ளார்
இதனைத் தொடர்ந்து அவரை போலீஸார் கைது செய்தனர். கோபத்தில் அத்தையே மருமகளின் உயிரை பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
மைதானத்தில் சுருண்டு விழுந்த பிரபல நட்சத்திர வீரர்... பாதியிலேயே வெளியேறிய சோகம்!
போதையில் போலீஸாரிடம் ஆபாசமாக பேசி வாக்குவாதம் செய்த இளம்பெண்!
கதறியழுத ஹன்சிகா ... நாள் முழுக்க உணவும் இறங்கலை!
பட்டாசு வெடிவிபத்து... உடல்களை வாங்க மறுத்து கிராம மக்கள் தொடர் போராட்டம்!
குட் நியூஸ்... தமிழகத்தில் நாளை முதல் இந்த சுங்கச்சாவடி மூடப்படுகிறது!