துரத்திய காட்டுப்பன்றி... பயந்து ஓடிய பெண் கிணற்றுக்குள் விழுந்து 20 மணி நேரம் போராட்டம்!

துரத்திய காட்டுப்பன்றி... பயந்து ஓடிய பெண் கிணற்றுக்குள் விழுந்து 20 மணி நேரம் போராட்டம்!
Updated on
2 min read

கேரளாவில் காட்டுப்பன்றி துரத்தியதால் அச்சமடைந்து உயிர் தப்ப கிணற்றில் குதித்த பெண்ணை, 20 மணி நேரத்திற்கு பிறகு தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக வனவிலங்குகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. வனப்பகுதியை விட்டு வெளியேறும் விலங்குகள், குடியிருப்புகள் அருகில் சுற்றித் திரிவதோடு அவ்வப்போது மனிதர்களையும் தாக்கி வருகிறது. நேற்று ஒரே நாளில் காட்டு மாடு மற்றும் யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர்.

கோழிக்கோடு மாவட்டம் காக்கயம் பகுதியில் காட்டு மாடுகள் முகாமிட்டு இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவித்த போதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனிடையே தனது வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த 70 வயது ஆபிரகாம் என்ற விவசாயி காட்டு மாடு முட்டியதில் உயிரிழந்தார்.

காட்டு மாடு தாக்கியதில் உயிரிழந்த ஆபிரகாம்
காட்டு மாடு தாக்கியதில் உயிரிழந்த ஆபிரகாம்

இதே போல் திருச்சூர் மாவட்டம் சாலக்குடி அருகே வத்சலா என்ற பழங்குடியின பெண் யானை தாக்கியதில் உயிரிழந்தார். இதனால் இந்தப் பகுதிகளில் பொதுமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பத்தனம்திட்டா மாவட்டத்தில் அரூர் பகுதியில் வசித்து வரும் எலிசபெத் என்பவர் நேற்று மாலை வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காட்டுப் பன்றி ஒன்று எலிசபெத்தை தாக்க முயன்றுள்ளது. இதனால் அச்சமடைந்த அவர் அருகில் உள்ள கிணறு ஒன்றின் மீது போடப்பட்டிருந்த மரப்பலகையின் மீது ஏறி நின்றுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மரப்பலகை உடைந்து சுமார் 50 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் எலிசபெத் விழுந்துள்ளார்.

50 அடி கிணற்றில் சிக்கித்தவித்த எலிசபெத்
50 அடி கிணற்றில் சிக்கித்தவித்த எலிசபெத்

கிணற்றுக்குள் 5 அடி உயரத்திற்கு தண்ணீர் இருந்ததால் பெரிய அளவில் காயங்கள் இன்றி எலிசபெத் உயிர் தப்பினார். ஆனால், அவரால் மேலே ஏறி வர முடியவில்லை. இதனால் இரவு முழுவதும் உதவி கேட்டு அவர் குரல் எழுப்பியுள்ளார். ஆனால் அருகில் யாரும் இல்லாததால், அவரை காப்பாற்ற யாரும் முன்வரவில்லை.

இதனால் சுமார் 20 மணி நேரத்திற்கும் மேலாக அவர் கிணற்றுக்குள்ளேயே சிக்கித் தவித்துள்ளார். இதனிடையே அவர் மாயமானதை அடுத்து அவரது உறவினர்கள் நேற்று மாலை முதலே அவரை தேடி வந்தனர். இன்று காலை கிணற்றுக்குள் இருந்து சத்தம் வருவதை கேட்டு சந்தேகம் அடைந்த சிலர், கிணற்றை எட்டிப் பார்த்திருக்கிறார்கள். அப்போதுதான், எலிசபெத் உள்ளே சிக்கி இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து அடூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் வலைகள் மூலம் எலிசபெத்தை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கேரளத்தில் தொடர்ந்து வனவிலங்குகளின் தாக்குதல்கள் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

அடேயப்பா, 11.5 கோடி ரூபாய், 120 கோடி ஆவணங்கள் பறிமுதல்... அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி!

எல்லா இந்தியர்களும் மோசமானவர்கள் அல்ல... பலாத்காரத்திற்குள்ளான ஸ்பெயின் பெண் பேட்டி !

ராகுல் யாத்திரையில் ஆம் ஆத்மி... குஜராத் பொதுக்கூட்டத்தில் கேஜ்ரிவால் இணைந்து கலக்க முடிவு!

நக்சல் தம்பதி கைது... பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸார் அதிரடி நடவடிக்கை!

பாடகருக்குப் பதில் களமிறங்கும் நடிகை... பாஜக போடும் பக்கா பிளான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in