வங்கி முகவர் போல பேசிய மர்மநபர்... டவுன்லோட் ஆப்பால் ரூ.11 லட்சம் இழந்த பெண்!

சைபர் குற்றங்கள்
சைபர் குற்றங்கள்

மகாராஷ்டிராவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது போனில் ஒரு ஆப் டவுன்லோடு செய்ததால் 11 லட்ச ரூபாயை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது உலகம் முழுவதும் சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. தொழில்நுட்பம் வளரும் அளவுக்கு அதுசார்ந்த குற்றங்களும் அதிகரிக்கின்றன. இந்நிலையில், புணேவைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது ஸ்மார்ட் ஃபோனால் 11 லட்ச ரூபாய் இழந்துள்ளார்.

அந்த பெண் தனது வங்கி கணக்கின் ஸ்டேட்மென்ட் விவரங்கள் ஆன்லைனில் கிடைக்குமா என இணையத்தில் தேடியுள்ளார். ஆனால், கிடைக்கவில்லை என்பதால் வாடிக்கையாளர் மைய எண்ணைத் தொடர்பு கொண்டுள்ளார்.

ஆனால் அவர், இணையத்தில் கண்டெடுத்தது போலி எண். அவர் அழைத்ததும், வங்கி முகவர்கள் போல் பேசிய மோசடிக்காரர்கள், அவருடைய போனில் சாஃப்ட்வேர் ஒன்றை இன்ஸ்டால் செய்யுமாறு கூறியுள்ளனர்.

சைபர் குற்றங்கள்
சைபர் குற்றங்கள்

அந்த பெண்ணும் சொன்னபடியே செய்துள்ளார். அவர் இன்ஸ்டால் செய்த ஆப் மூலம் அவரது போனை எங்கிருந்து வேண்டுமானாலும் மோசடிக்காரர்கள் இயக்க முடியும். மேலும், தனது வங்கி கணக்கு எண், பாஸ்வேர்டு போன்ற விவரங்களையும் அவர்களிடம் பகிர்ந்துள்ளார்.

பின்னர் தங்களது இணையதளம் சென்று விபரங்களை கொடுத்தால் ஸ்டேட்மெண்ட் கிடைக்கும் என மோசடிக்காரர்கள் கூறியுள்ளனர். விவரங்களை அவர் பதிவு செய்த அடுத்த நொடியே, வங்கிக் கணக்கிலிருந்து ரூ.11 லட்சம் திருடப்பட்டது.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், காவல்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளைத் தேடி வருகின்றனர். இதுபோன்ற மோசடிகளில் சிக்காமல் இருக்க, தெரியாத நபர்களுக்கு வங்கி விவரங்களை தர வேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

இன்று நவராத்திரி திருவிழா ஆரம்பம்... என்னென்ன விசேஷம்? எப்படி கொண்டாடுவது?!

கருணாநிதியின் ‘மூத்த பிள்ளை’க்கு வந்த சோதனை!

ஒரு சிக்ஸர் கூட அடிக்கலை… 20 ஓவரில் 427 ரன்கள் எடுத்து மகளிர் கிரிக்கெட் அணி உலக சாதனை!

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்… மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!

ஜீன்ஸ், லெக்கின்ஸ் போட்டு கோர்ட்டுக்கு வரக்கூடாது... வக்கீல்களுக்கு பார் கவுன்சில் கறார் உத்தரவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in