அரசு பெண் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு: மர்ம நபர்களைத் தேடும் காவல் துறை!

அரசு பெண் வழக்கறிஞருக்கு அரிவாள் வெட்டு: மர்ம நபர்களைத் தேடும் காவல் துறை!

திருப்பூர் அருகே அரசு பெண் வழக்கறிஞரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜமீலா பானு. இவர் திருப்பூர் மகிளா நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராகப் பணியாற்றி வருகிறார்.

நாளை நடைபெறும் வழக்குகளுக்கான கோப்புகளைத் தயார் செய்வதற்காக திருப்பூர் குமரன் சாலையில் உள்ள தனது அலுவலகத்தில், ஜமீலா பானு தன் மகளுடன் இன்று அலுவலகத்திற்குச் சென்றுள்ளார். அப்போது அந்த அலுவலகத்தில் நுழைந்த இரண்டு மர்ம நபர்கள் ஜமீலா பானுவை அரிவாளால் வெட்டினர். அதைத் தடுக்கச் சென்ற மகளுக்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. இதையடுத்து அந்த மர்ம நபர்பகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

ஜமீலா பானுவின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தவர்கள் இருவரையும் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து திருப்பூர் வடக்கு காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

பட்டப் பகலில் பெண் வழக்கறிஞரை அரிவாளால் வெட்டிய சம்பவம் திருப்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து திருப்பூர் வழக்கறிஞர்கள் நாளை போராட்டம் நடத்த இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in