பெண்ணைக் கொடூரமாக கொலை செய்து நகைக் கொள்ளை... பெங்களூருவில் பயங்கரம்!

கொலை செய்யப்பட்ட திவ்யா.
கொலை செய்யப்பட்ட திவ்யா.

வீட்டில் தனியாக இருந்த பெண்ணை கழுத்தை நெரித்துக் கொலை செய்து அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச்செயினைத் திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

கர்நாடகா தலைநகரான பெங்களூருவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதனால் வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் அச்சமடைந்து வருகின்றனர். அப்படி வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை செய்யப்பட்டு நகைக் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகாவில் பெங்களூருவில், கெங்கேரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கோணசந்திராவைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி திவ்யா(36). ஒரு சலூன் கடையில் குருமூர்த்தி வேலை செய்து வருகிறார். நேற்று அவர் வேலைக்குச் சென்று விட்டார். வீட்டில் அவரது மனைவி திவ்யா மட்டும் தனியாக இருந்துள்ளார்.

இந்த நிலையில், வேலை முடிந்து குருமூர்த்தி வீட்டுக்கு வந்து பார்த்த போது, அவரது மனைவி திவ்யா இறந்து கிடந்தார். அவரது கழுத்தில் இருந்த தங்கச்செயின் காணாமல் போய் இருந்தது. இதனால், அதிர்ச்சியடைந்த குருமூர்த்தி உடனடியாக கெங்கேரி காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த போலீஸார், திவ்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆர்.ஆர்.மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதன்பின் குருமூர்த்தியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.அப்போது தான் வேலைக்குச் சென்ற போது இந்த சம்பவம் நடந்ததாவும், தனது மனைவி திவ்யா அணிந்திருந்த தங்கச்சங்கிலியைக் காணவில்லை என்றும் புகார் கூறினார். தங்கச் சங்கிலிக்காக திவ்யா கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், திவ்யாவை கொலை செய்த கொலையாளிகளைத் தேடி வகின்றனர்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in