நம்பர் பிளேட் கேட்ட போலீஸ்காரருக்கு செருப்படி... இ ரிக்‌ஷா பெண் டிரைவர் அடாவடி!

போலீஸ்காரரை செருப்பால் அடிக்கும் இ ரிக்‌ஷா பெண் ஓட்டுநர்
போலீஸ்காரரை செருப்பால் அடிக்கும் இ ரிக்‌ஷா பெண் ஓட்டுநர்

காசியாபாத்தில் போலீஸ்காரரை இ ரிக்‌ஷா பெண் ஓட்டுநர் செருப்பால் தாக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

போலீஸ்காரரை விரட்டி விரட்டி செருப்பால் அடிக்கும் இ ரிக்‌ஷா பெண் ஓட்டுநர்
போலீஸ்காரரை விரட்டி விரட்டி செருப்பால் அடிக்கும் இ ரிக்‌ஷா பெண் ஓட்டுநர்

உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள இந்திரா நகர் பகுதியில் இ ரிக்‌ஷாக்களால் போக்குவரத்து அடிக்கடி ஏற்படுகிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், நம்பர் பிளேட் இல்லாத இ ரிக்‌ஷா அந்த பகுதியில் போக்குவரத்திற்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர், நம்பர் பிளேட் இல்லாததைக் கண்டு உடனடியாக இ ரிக்‌ஷாவை அங்கிருந்து எடுக்கச் சொல்லியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த பெண் இ ரிக்‌ஷா ஓட்டுநர் மிதிலேஷ் என்பவர், தனது காலில் மாட்டியிருந்த செருப்பை கழட்டி போலீஸ்காரரை சரமாரியாக தாக்கினார். அடி பொறுக்க முடியாமல் அந்த போலீஸ்காரர் தடுக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "இ ரிக்‌ஷாக்களால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக எங்களுக்கு பல புகார்கள் வந்துள்ளன. ஒரு போக்குவரத்து காவலர் சம்பவ இடத்திற்கு வந்து அந்த பெண்ணிடம் இ ரிக்‌ஷாவை அந்த இடத்திலிருந்து நகர்த்தும்படி கூறினார். ஆனால் அந்தப் பெண் அவரிடம் தவறாக நடந்துள்ளார்.

அவரது இ ரிக்‌ஷாவில் நம்பர் பிளேட் இல்லாததால் போக்குவரத்து துறை மூலம் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த பெண் இ ரிக்‌ஷா ஓட்டுநர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து, மிதிலேஷ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது

உத்தரப்பிரதேசத்தில் போலீஸ்காரரை நடுரோட்டில் பெண் ஒருவர் செருப்பால் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பகீர்... 250 பாலஸ்தீன குழந்தைகள் மரணம்!

பிறந்து 72 நாட்களில் 31 வகையான சான்றிதழ்கள்... உலக சாதனை படைத்த குழந்தை

க்ளாமர் லுக்கில் கெத்து காட்டும் நயன்தாரா!

இடது பக்கம் அண்ணாமலை... நடுவில் முதல்வர் விஜய்யாம்... வலது பக்கம் டிடிவி; ரசிகர்களின் அட்ராசிட்டி போஸ்டர்

மாணவர்களுக்கு சப்ளை... உல்லாச வாழ்க்கை; 3,750 போதை மாத்திரைகளுடன் 4 இளைஞர்கள் கைது

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in