பரபரப்பு...போலீஸ் ஸ்டேஷன் முன் இளம்பெண் தீக்குளித்து சாவு... பொதுமக்கள் அதிர்ச்சி!

கலைச்செல்வி
கலைச்செல்வி
Updated on
2 min read

புதுச்சேரி மாநிலம் காலாப்பட்டு காவல் நிலைய வளாகத்தில் தீக்குளித்த பெண் சிகிச்சை பலனின்றி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.

தீக்காயங்களுடன் கலைச்செல்வி
தீக்காயங்களுடன் கலைச்செல்வி

புதுச்சேரி பிள்ளைச்சாவடி மீனவர் பகுதியை சேர்ந்த சந்திரன் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவருக்கு  ரூ 5 லட்சம் கடனாக கொடுத்துள்ளார். இந்த கடனை பலமுறை கேட்டும் தராததால் காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். காவல் நிலையத்திலும் சரியான நடவடிக்கை எடுக்காததால் சந்திரன்  ஏழுமலையிடம் நேற்று நேரில் சென்று கேட்டுள்ளார் .

அவரோ,  'பணம் கொடுக்க முடியாது,  எங்கு வேண்டுமானாலும் போய் சொல்' என்று மிரட்டியுள்ளார். இதனால் சந்திரன் மற்றும் அவரது மனைவி கலைச்செல்வி ஆகிய இருவரும் நேற்று மாலை காலாப்பட்டு காவல் நிலையத்திற்கு  சென்று புகார் கொடுத்தனர். அப்போது ஏழுமலையும், காவல் நிலையத்திற்கு வந்து சந்திரன் மீது ஒரு  புகார் கொடுத்துள்ளார்.

பொதுமக்கள் போராட்டம்
பொதுமக்கள் போராட்டம்

காவல் நிலையத்தில் இருந்த காவல் அதிகாரிகள் ஏழுமலையை  இருக்கையில் அமர வைத்து கடன் கொடுத்த சந்திரனை  வெளியே போகுமாறு கூறியதாக கூறப்படுகிறது. மேலும் ஏழுமலை, காவலர்கள் முன்னிலையில் உன் பணத்தை கொடுக்க முடியாது என்று தெரிவித்திருக்கிறார்.  காவல் நிலையம் வந்தும் தங்களுக்கு பணம் கிடைக்கவில்லையே என்ற விரக்தியில்  சந்திரனின் மனைவி கலைச்செல்வி (35)  வாகனத்திற்கு வாங்கிச் சென்ற பெட்ரோலை எடுத்து வந்து தன் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார். 

இதில் கலைச்செல்வி  உடல் முழுவதும் தீ  வேகமாக பரவி பற்றி எரிய  ஆரம்பித்தது. அங்கிருந்த காவலர்கள் மற்றும் பொதுமக்கள் ஓடி வந்து தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர். ஆனால் 50 சதவீத அளவுக்கு மேல் கலைச்செல்விக்கு தீக்காயம் ஏற்பட்டது. அதையடுத்து அவரை உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம்  ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று காலை 6:45 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த நிலையில் காலாப்பட்டு காவல் நிலையத்தில் பொதுமக்கள் குவிந்து ஈசிஆர்  சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல் நிலையத்தில் பணியில் இருந்த உதவி ஆய்வாளர் உள்ளிட்ட  இரண்டு பேரை  ஆயுதப் படைக்கு மாற்றி புதுச்சேரி காவல்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in