
மும்பையில் தனது பூனையை துரத்தியதற்காக நாய் மீது பெண் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் தனது செல்ல பூனையை விரட்டிய நாய் மீது பெண் ஆசிட் வீசியுள்ளார். இதில் நாய் கண்களை இழந்துள்ளதுடன், உடல் முழுவதும் காயமடைந்தது. இது தொடர்பான அதிர்ச்சி வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது வீடியோவில் இருந்தவர் மல்வானி பகுதியைச் சேர்ந்த ஷபிஸ்தா சுஹைல் அன்சாரி(35) என்பது தெரிய வந்தது. அவர் மீது விலங்குகளைக் கொடுமைப்படுத்துவது உள்பட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
கண்களை இழந்து காயமடைந்த பிரவுனி என்ற அந்த நாயை தொலைக்காட்சி நடிகரான ஜெயா பட்டாச்சார்யா மற்றும் அவரது குழுவினர் மீட்டு தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். இந்த சம்பவம் மும்பையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.