சிறுமியின் கையில் சூடுவைத்த பக்கத்து வீட்டுப் பெண் கைது

சிறுமியின் கையில் சூடுவைத்த பக்கத்து வீட்டுப் பெண் கைது

பொள்ளாச்சியில் சிறுமியின் கையில் சூடுவைத்த பக்கத்து வீட்டுப் பெண் கைது செய்யப்பட்டார்.

பொள்ளாச்சி அருகில் உள்ள ஜமீன்முத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சிவலிங்கம். இவரது மகள் 8 வயதே ஆன ஸ்ரீதன்யா, அப்பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் மூன்றாம் வகுப்பு படித்துவருகிறார். நேற்று தனது வீட்டின் முன்பு ஸ்ரீதன்யா விளையாடிக்கொண்டிருந்தபோது அங்குவந்த பக்கத்து வீட்டுப் பெண் அருக்காணி, தன் வீட்டுக்குச் சிறுமியை அழைத்துச் சென்றார். அங்கே கூட்டிப்போய், 'எனது உண்டியலை ஏன் எடுத்தாய்?' எனக் கேட்டு சிறுமியை மிரட்டியதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து கம்பியைச் சூடாக்கி குழந்தையின் இரு கைகளிலும் சூடு வைத்தார்.

குழந்தை வலியால் அலறியது. அலறல் சத்தம் கேட்டு சிறுமியின் குடும்பத்தினர் ஓடிவந்தனர். அப்போது அவர்களையும் சரமாரியாகத் திட்டினார் அருக்காணி. இதுகுறித்து ஸ்ரீதன்யாவின் குடும்பத்தினர் பொள்ளாச்சி மேற்குக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

போலீஸார் இது தொடர்பாக வழக்குப் பதிந்து அருக்காணியை இன்று கைது செய்தனர். குழந்தைக்குச் சூடு வைத்த விவகாரம் என்பதால் இதுகுறித்து குழந்தைகள் பாதுகாப்பு அலகு அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in