வெளியே பறந்த பாத்திரங்கள்... வீடுகளை சூறையாடிய யானைகள்; பீதியில் வால்பாறை மக்கள்!

வால்பாறை யானைகள்
வால்பாறை யானைகள்
Updated on
1 min read

வால்பாறை அருகே காட்டு யானைகள் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பில் புகுந்து வீடுகளை உடைத்து அட்டகாசம் செய்ததால் அங்கு வசிக்கும் மக்கள் அச்சமடைந்துள்ளனர் .

கோவை மாவட்டம், வால்பாறையை அடுத்து உள்ளது ஸ்டேன்மோர் எஸ்டேட். வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 17 காட்டு யானைகள் நேற்று இந்த பகுதிக்கு வந்தன. தேயிலை தோட்டங்களில் சுற்றித்திருந்த அவை திடீரென தொழிலாளர் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்தன. அந்த பகுதியில் சுற்றி வந்த யானைகள் சுந்தர்ராஜன் என்பவர் வீட்டை உடைத்து உள்ளே புகுந்து உணவு தேடியுள்ளன. வீட்டில் இருந்த நாற்காலி, கிரைண்டர், குக்கர் மற்றும் பாத்திரங்களை சேதப்படுத்தின. பாத்திரங்களை சுவற்றை உடைத்து வெளியே வீசின. நல்வாய்ப்பாக சுந்தர்ராஜன் தீபாவளிக்கு வெளியூர் சென்றிருந்ததால் உயிர் தப்பினார்.

யானைகள், அதோடு நிற்காமல் அடுத்தடுத்துள்ள 5 வீடுகளின் கதவுகளை உடைத்துள்ளன. சம்பவத்தை நேரில் கண்ட பொதுமக்கள் கூட்டத்தில் உள்ள குட்டி யானைகள் வீட்டை உடைப்பதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சூழலை ஆய்வு செய்தனர். யானைகள் தொடர்ந்து அதே பகுதியில் சுற்றி வருவதால் வனத்துறையினர் அங்குள்ள மக்களுக்கு பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

கவுண்டர் பையனைத்தான் கல்யாணம் கட்டுவோம்; உறுதிமொழி எடுத்த பெண்கள்: திமுக கூட்டணி கட்சி நிர்வாகியால் சர்ச்சை!

HBD Mamta Mohandas|புற்றுநோய் தந்த பயமும்...விட்டிலிகோ தந்த நம்பிக்கையும்!

காதலை ஏற்க காதலன் குடும்பம் மறுப்பு… காதலி மர்மமான முறையில் மரணம்!

உஷார்; தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் கனமழை: ஆட்சியர்களுக்கு வருவாய்த்துறை அவசர கடிதம்!

அதிர்ச்சி: தாத்தா ஓட்டிய காரின் சக்கரத்தில் சிக்கி 2வயது குழந்தை பலி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in