
திருப்பத்தூர் அருகே கணவருடன் சேர்த்து வைக்கக் கோரி பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அவரது மாமியார் விஷம் குடித்த சம்பவத்தால் பரபரப்பு நிலவுகிறது.
திருப்பத்தூர் அருகே உள்ள பா. முத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்த திருப்பதி (23) என்பவரும் நீலாம்பரி (22) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இரு வீட்டாரின் எதிர்ப்பையும் மீறி, கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போலீஸார் முன்னிலையில் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இதையடுத்து இருவரும் பெண்ணின் வீட்டிலேயே கடந்த 2 மாதங்களாக வசித்து வந்தனர். தனது வீட்டிற்கு சென்று, பெற்றோர்களிடம் பேசி அழைத்துச் செல்வதாக கூறி ஒரு மாதத்திற்கு முன்பு திருப்பதி சென்றுள்ளார். அங்கு சென்ற பின்னர், திருப்பதி தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் நீலாம்பரி திருப்பதியை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பேசியபோது, தனக்கு 25 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் 30 பவுன் நகை மற்றும் திருப்பத்தூரில் சொகுசு வீடு வாங்கிக் கொண்டு வர வேண்டும் என்பது பெற்றோரின் விருப்பமாக இருப்பதாகவும், அதையேதான் தானும் கேட்பதாகவும் கூறியுள்ளார். இல்லையென்றால் சேர்ந்து வாழ முடியாது எனக் கூறி நீலாம்பரியின் செல்போன் எண்ணை பிளாக் செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து நீலாம்பரி கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்திருக்கிறார்.
ஆனால் போலீஸார் நடவடிக்கை எடுக்காததால் திடீரென நீலாம்பரி, திருப்பதியின் வீட்டின் முன்பு தனது கணவருடன் சேர்த்து வைக்கும்படியும், வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தும் மாமனார், மாமியார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில் திருப்பதியின் தாயார் பிரபாவதி, திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை அறிந்த அவரது குடும்பத்தினர், அவரை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் காரணமாக பா.முத்தம்பட்டி பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
இதையும் வாசிக்கலாமே...
ஹெச்.சி.எல் நிறுவனத்தில் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு! மாணவர்கள் உற்சாகம்!
திருப்பதியில் பேத்தியுடன், துர்கா ஸ்டாலின் தரிசனம்!
கடும் போக்குவரத்து நெரிசல்... படப்பிடிப்புக்கு மெட்ரோவில் பயணித்த பிரபல நடிகர்!
அதிர்ச்சி... தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகிக்கு சரமாரி வெட்டு!
நான் ஹெல்மெட் திருடவில்லை; உயிரை மாய்த்துக்கொள்வேன்... சிறப்பு எஸ்ஐ கதறல்!