என் மனைவியை அதிமுக பிரமுகர் கடத்தி வைத்துள்ளார்... கணவர் புகாரால் பரபரப்பு!

அதிமுக மதுரை மாநாட்டில் குவிந்த தொண்டர்கள்
அதிமுக மதுரை மாநாட்டில் குவிந்த தொண்டர்கள்

மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டிற்கு சென்ற தனது மனைவி, அதன் பின்னர் வீடு திரும்பவில்லை என அவரது கணவர் திருநெல்வேலி காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நகையுடன் மனைவியை காணவில்லை
நகையுடன் மனைவியை காணவில்லை

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே உள்ள கன்னங்குளத்தை சேர்ந்தவர் ஜேசுபாதம். லாரிகள் வைத்து தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி தங்கசெல்வம். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். தங்கசெல்வம் அதிமுக மகளிர் அணியில் இருந்து வருகிறார்.

இந்நிலையில் ஜேசுபாதம் திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில், எனது மனைவி கடந்த முறை உள்ளாட்சி தேர்தலில் போது மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.

கடந்த 17ம் தேதி மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டிற்கு சென்றவர் இன்னும் வீடு திரும்பவில்லை. எனது மனைவி மாநாட்டிற்கு செல்லும் போது 50 பவுன் நகை அணிந்திருந்ததுடன், ஒரு லட்ச ரூபாய் பணமும் வைத்திருந்தார். அவரை அதிமுக பிரமுகர் ஒருவர் கடத்தி சென்று லாட்ஜில் அடைத்து வைத்துள்ளதாக கேள்விபடுகிறேன். எனவே எனது மனைவியை மீட்டுத் தர வேண்டும் என அந்த புகாரில் கூறியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in