உயிரை மாய்த்த காதல் மனைவி: கழிப்பறை இல்லாததால் எடுத்த விபரீத முடிவு

உயிரை மாய்த்த காதல் மனைவி: கழிப்பறை இல்லாததால் எடுத்த விபரீத முடிவு

கணவர் வீட்டில் கழிப்பறை இல்லாத வேதனையில் காதல் திருமணம் செய்து கொண்ட இளம்பெண் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சோக சம்பவம் கடலூரில் நடந்துள்ளது.

கடலூரை சேர்ந்த கார்த்திகேயனும், அரிசிபெரியாங்குப்பத்தை சேர்ந்த ரம்யாவும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இரு வீட்டாரும் இவர்களது காதல் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, இரண்டு பேருக்கும் கடந்த மாதம் 6-ம் தேதி திருமணம் நடந்துள்ளது. பல கனவுகளுடன் கணவர் வீட்டிற்கு சென்ற ரம்யாவுக்கு கழிப்பறை இல்லாதது பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, கழிப்பறை இருக்கும் வீட்டை பார்க்கும்படி கணவரிடம் ரம்யா கூறியுள்ளார். இதனை கார்த்திகேயன் கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது. கழிப்பறை தொடர்பாக இரண்டு பேருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் வேதனையில் இருந்த ரம்யா, வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப் போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைப் பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து, ரம்யாவை கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனையில் ரம்யா அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ரம்யா உயிரிழந்தார்.

இது குறித்து ரம்யாவின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் திருப்பாப்புலியூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான ஒரே மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டதால் கோட்டாட்சியரும் விசாரணை மேற்கொண்டுள்ளார்.

காதல் திருமணம் செய்த இளம்பெண், கணவர் வீட்டில் கழிப்பறை இல்லாத வேதனையில் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.