காட்டிக் கொடுத்த பிரேத பரிசோதனை: கணவனைக் கொலை செய்து தற்கொலை நாடகமாடிய மனைவி கைது!

கிருஷ்ணவேணி, ரமேஷ்.
கிருஷ்ணவேணி, ரமேஷ்.

போடியில் கணவன் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய மனைவியை போலீஸார் கைது செய்தனர்.

கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் பெயிண்டராக வேலை செய்து வந்தார். இவருக்கும், கிருஷ்ணவேணி என்பவருக்கும் திருமணமாகி கார்த்திக் என்ற மகன் உள்ளார்.

தேனி மாவட்டம் போடியில் உள்ள தனியார் பள்ளி விடுதியில் தங்கி கார்த்திக் படித்து வருகிறார். எனவே, அவரைப் பார்க்க அடிக்கடி கேரளாவில் இருந்து வருவது சிரமமாக இருந்ததால், போடி ஜீவா நகரில் வீடு வாடகைக்கு எடுத்து அடிக்கடி வந்து சென்றனர்.

தீபாவளி பண்டிகைக்கு கணவன், மனைவி இருவரும் கேரளாவில் இருந்து வந்தனர். இந்த நிலையில் பண்டிகை கொண்டாடிய பின், அவர்களது மகன் கார்த்திக், திருப்பூரில் உள்ள மாமா வீட்டுக்கு சென்றார்.

இந்நிலையில் நேற்று இரவு ரமேஷ் தூக்கிலிட்டு தற்கொலை செய்ய கொண்டதாக கூறப்டுகிறது. இதுகுறித்து கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் ரமேஷ் உடலைக் கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்கு போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

குற்றம்
குற்றம்

பிரேத பரிசோதனையில் ரமேஷ் உடலை ஆய்வு செய்த மருத்துவர்கள், சடலத்தில் பல்வேறு இடங்களில் நகக்கீறலும், தோள்பட்டை பகுதியில் காயங்களும் இருப்பதைக் கண்டுபிடித்து, இறப்பில் மர்மம் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து உடனடியாக கிருஷ்ணவேணியிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது தனது கணவனை கழுத்தை நெரித்து கொலை செய்ததை கிருஷ்ணவேணி ஒப்புக்கொண்டார். அதன் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை செய்து வருகின்றனர். கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in