கொலையில் முடிந்த டிவி நிகழ்ச்சி... சொத்துக்காக தந்தையை வெட்டிக்கொன்ற மகன்!

கொலை செய்யப்பட்ட கருப்பண்ணன்
கொலை செய்யப்பட்ட கருப்பண்ணன்
Updated on
2 min read

சேலம் அருகே, தனியார் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்று குடும்பப் பிரச்சினையை பேசிய தந்தையை மகனே வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே தாண்டவராயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கருப்பண்ணன் (67). கட்டிட வேலை செய்துவந்த இவருக்கு மாரியம்மாள் (65) என்ற மனைவியும், ராஜா (40) என்ற மகனும், சந்திரா (35) என்ற மகளும் உள்ளனர். ராஜாவுக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவியை பிரிந்து இரண்டாவது மனைவியுடன் வசித்து வருகிறார். மகள் சந்திராவுக்கு திருமணம் ஆகி கணவர் வீட்டில் வசித்து வருகிறார்.

கொலை நடந்த வீட்டில் போலீஸ் விசாரணை
கொலை நடந்த வீட்டில் போலீஸ் விசாரணை

கருப்பண்ணனுக்கு சொந்தமாக தாண்டவராயபுரம் மற்றும் வெண்ணந்தூர் பகுதிகளில் சொத்துக்கள் உள்ளன. இதனை ராஜாவின் முதல் மனைவியின் மகனான சங்கர் பெயரில் எழுதி வைக்க கருப்பண்ணன் முடிவு செய்திருந்ததாக கூறப்படுகிறது. இதனால் கருப்பண்ணனுக்கும் மகன் ராஜாவுக்கும் கடந்த சில ஆண்டுகளாகவே தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் மனைவி மாரியம்மாளை பிரிந்து கருப்பண்ணன் வாழ்ந்து வந்தார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு தனியார் டிவியின் விவாத நிகழ்ச்சி ஒன்றில் கருப்பண்ணன், மாரியம்மாள், ராஜா மூவரும் பங்கேற்றனர்.

சொத்துக்காக மனைவி, மகனே கொலை செய்ததாக தகவல்
சொத்துக்காக மனைவி, மகனே கொலை செய்ததாக தகவல்

அப்போது அந்த நிகழ்ச்சியில் ஒருவருக்கொருவர் தாக்கிக் கொண்டனர். அது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த நிலையில், இன்று வீட்டில் கருப்பண்ணன் தனியாக இருந்தார். அப்போது அவரது மனைவி மாரியம்மாள், மகன் ராஜா ஆகிய இருவரும் வீட்டிற்கு வந்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்ந்து தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து கருப்பண்ணனை சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். படுகாயம் அடைந்த கருப்பண்ணன், ரத்த வெள்ளத்தில் சாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தந்தை கருப்பண்ணனை கொலை செய்துவிட்டு மாயமான மகன் ராஜா
தந்தை கருப்பண்ணனை கொலை செய்துவிட்டு மாயமான மகன் ராஜா

இது குறித்து அக்கப்பக்கத்தினர் அளித்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் கருப்பண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப் பதிவு செய்து தப்பியோடிய மாரியம்மாளையும் ராஜாவையும் தீவிரமாக தேடி வருகின்றனர். டிவி நிகழ்ச்சியில் ஆரம்பித்த சண்டை கொலையில் முடிந்த சம்பவம் ஆத்தூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...    

12ம் வகுப்பு வேதியல் தேர்வு... தவறான கேள்விக்கு மதிப்பெண் வழங்க உத்தரவு!

தலையில் விசிக; கழுத்தில் திமுக... பறையடித்து பட்டையைக் கிளப்பிய திமுக வேட்பாளர்!

பயங்கர தீ விபத்து... ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் சாவு!

'மஞ்சுமெல் பாய்ஸ்’ நடிகரை கரம் பிடிக்கும் அபர்ணா தாஸ்... ரசிகர்கள் வாழ்த்து!

ரயிலில் திடீரென ஸ்பைடர் மேனாக மாறிய வாலிபர்... வைரலாகும் அசத்தல் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in