பட்டாக்கத்தியுடன் கேக் வெட்டிய நபர்கள்: சென்னையில் மீண்டும் ரவுடிக்கும்பல் அட்டகாசமா?

பட்டாக்கத்தியுடன் கேக் வெட்டிய நபர்கள்: சென்னையில்  மீண்டும் ரவுடிக்கும்பல் அட்டகாசமா?

சென்னையில் சிலர் பட்டாக் கத்தியுடன் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர்கள் ரவுடிக்கும்பலைச் சேர்ந்தவர்களா என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் உள்ள ரவுடிகள் சிலர், பட்டாக் கத்தியால் கேக் வெட்டி அதை வீடியோவாக்கி சமூக வலைதளங்களில் பதிவிடுவது வாடிக்கை. அவர்களைக் கண்டறிந்து இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என போலீஸார் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி சிலர் பிறந்தநாள் கொண்டாடினர். அதை இளைஞர்கள் சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை வைத்து சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் ரவுடிக்கும்பலைச் சேர்ந்தவர்களா என சைபர் கிரைம் போலீஸார் உதவியுடன் சென்னை போஸீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in