லாரியில் இருந்த 7 கிலோ தங்க பிஸ்கட்! வறுமையால் கடத்த ஒப்புக்கொண்ட டிரைவர்

லாரியில் இருந்த 7 கிலோ தங்க பிஸ்கட்! வறுமையால் கடத்த ஒப்புக்கொண்ட டிரைவர்

வங்கதேசத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.4 கோடி மதிப்பிலான தங்க பிஸ்கட்டுகளை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்.

வங்கதேசத்தில் இருந்து வந்த லாரி ஒன்றை இந்திய – வங்கதேச எல்லையான பெட்ரபோல் என்ற இடத்தில் பாதுகாப்பு படையினர் சோதனையிட்டனர். அப்போது லாரியில் தங்க பிஸ்கட்டுகள் பதுக்கி வைத்து கடத்தி வந்தது கண்டறியப்பட்டது.

விசாரணையில் லாரியை ஓட்டிவந்த நபர் மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் ஜாய்ப்பூர் பகுதியைச் சேர்ந்த சுராஜ் மேக் (23) என தெரியவந்தது. அவர் கடந்த ஒரு வருடமாக லாரி ஓட்டுநராக வேலை செய்து வருகிறார்.

வங்கதேசத்தில் இருந்து மேற்குவங்கத்திற்கு சரக்குகளை ஏற்றிச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அந்த வகையில் கடந்த 30-ம் தேதி பெனபோல் துறைமுகத்திற்கு சரக்குகளை ஏற்றிச் சென்று இறக்கி வைத்தார்.

அவர் திரும்பும் போது, வங்கதேசத்தை சேர்ந்த முகமது மமூன் என்பவர், தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என கூறியுள்ளார். அதற்காக பணம் தருவதாக மமூன் கூறியுள்ளார். வறுமையில் இருந்த சுராஜ் அதற்கு ஒப்புக் கொண்டார்.

அவ்வாறு தங்க பிஸ்கட்டுகளை லாரியில் கொண்டுவரும் போது பாதுகாப்பு படையினர் தீவிரமாக சோதனையிட்டனர். அப்போது, சுமார் 7 கிலோ எடை கொண்ட தங்க பிஸ்கட்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து, சுராஜை கைது செய்த பாதுகாப்பு படையினர், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பயங்கரவாத செயல்களுக்காக உதவ தங்க பிஸ்கட்டுகளை கொண்டு செல்லப்பட்டதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in