விழுப்புரம் அருகே உள்ள அன்னியூரில் இன்று காலை தாயுடன், தனது அக்காவை பள்ளிப்பேருந்தில் ஏற்றிவிட சென்ற 3 வயது பெண் குழந்தை, அதே பள்ளி பேருந்தில் சிக்கி உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்து குழந்தையின் தாய் கதறி அழுத சம்பவம் பலரது நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது. இதுதொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.