தாயை விரட்டி விரட்டி கட்டையால் தாக்கும் மகன்... வெளியான அதிர்ச்சி வீடியோ!

தாயை விரட்டி விரட்டி கட்டையால் தாக்கும் மகன்... வெளியான அதிர்ச்சி வீடியோ!

தனது தாயைக் கட்டையால் மகன் தாக்கும் அதிர்ச்சி வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. தாக்குதல் நடத்திய மகன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தாயைத் தாக்கும் மகன்.
தாயைத் தாக்கும் மகன்.

உலகில் கெட்ட குழந்தைகள் இருக்கலாம், ஆனால், கெட்ட தாய் இருக்க முடியாது என்ற பழமொழி உள்ளது. இது தாயின் தூய அன்பை வெளிப்படுத்துவதற்காக சொல்லப்பட்ட பழமொழியாகும். ஆனால், பெற்ற தாயை, பொதுமக்கள் மத்தியில் அவரது மகன் கொடூரமாக தாக்கிய நிகழ்வு, சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம், புலந்த்ஷாஹரில் இந்த சம்பவம் நேற்று இரவு நடைபெற்றுள்ளது. இதனை அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில், ஒரு வாலிபர் தடியை ஏந்திக்கொண்டு தன் தாயை இழுத்துக் கொண்டு கோயிலைச் சுற்றி வருகிறார். அப்போது அந்த தாய், தன் மகனிடமிருந்து தப்பிக்க அலறிக்கொண்டே கோயிலைச் சுற்றி ஓடுகிறாள்.

ஆனால், அவரை கட்டையோடு மகனுடன் விரட்டி வருகிறார். கடைசியில் களைத்துப் போய் கோயில் முன் நிற்கும் தாயை, பொதுமக்கள் மத்தியில் மிருகத்தனமாக அந்த வாலிபர் தாக்குகிறார். கடைசியில் அந்த வாலிபரை பிடித்து காவல் துறையினரிடம் பொதுமக்கள் ஒப்படைக்கின்றனர். தாக்குதலுக்கான தாய் பாபி என்றும், தாக்கிய அவரது மகன் துர்கேஷ் சர்மா என்பதும் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது.

துர்கேஷ் சர்மா மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தாயை தாக்கிய அவரது மகன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுபோல அவர் மீண்டும் நடக்காதது போன்று போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நெட்டிசன்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...    

மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்... பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்!

‘ஜப்பான், பிலிப்பைன்ஸில் சுனாமி எச்சரிக்கையால் பரபரப்பு... சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் சரிந்தன!

கேளிக்கை விடுதியில் பயங்கர தீ விபத்து... 29 பேர் எரிந்து உயிரிழந்த பரிதாபம்!

வள்ளி கும்மி நடனமாடி வாக்கு சேகரித்த அண்ணாமலை... கோவை பரப்புரையில் குதூகலம்!

தமிழகம் முழுவதும் ஒரே நாளில் ரூ.4 கோடி பறிமுதல்... வருமான வரித்துறை அதிரடி நடவடிக்கை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in