சாலையில் அமர்ந்திருந்த போதை ஆசாமி
சாலையில் அமர்ந்திருந்த போதை ஆசாமி

வாகன ஓட்டிகள் அதிர்ச்சி! நடுரோட்டில் நாற்காலியில் ஒய்யாரமாக அமர்ந்திருந்த போதை ஆசாமி

நடுரோட்டில் நாற்காலியில் அமர்ந்து கொண்டு வாகன ஓட்டிகளுக்கு தொல்லை கொடுத்த போதை ஆசாமியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சாலையில் அமர்ந்திருந்த போதை ஆசாமி
சாலையில் அமர்ந்திருந்த போதை ஆசாமி

வேலூர் மாவட்டம், குடியாத்தத்தில் இருந்து காட்பாடி செல்லும் சாலை எப்போது பரபரப்புடன் காணப்படும். நேற்று இரவு குடியாத்தம் அருகே ஒரு போதை ஆசாமி இந்த சாலையில் நடுவே நாற்காலில் போட்டு ஒய்யாரமாக அமர்ந்திருந்தார். இரவில் அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பலரும் இந்த நபரை கண்டு பதறியபடி சென்றனர். சரக்கு லாரிகள், பேருந்துகள், கார்கள் என எதற்கு அசராத அந்த போதை ஆசாமி இரவில் வாகன ஓட்டிகளுக்கு தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தார்.

சாலையில் அமர்ந்திருந்த போதை ஆசாமி
சாலையில் அமர்ந்திருந்த போதை ஆசாமி

உடனடியாக இதுகுறித்து குடியாத்தம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் நடு ரோட்டில் நாற்காலியில் அமர்ந்தவாறு வாகன ஓட்டிகளுக்கு தொல்லை கொடுத்த போதை ஆசாமியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in